ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்ட, எஸ்.பி., பண்டி கங்காதர் வெளியிட்டுள்ள அறிக்கை: கிருஷ்ணகிரி மாவட்டத்தில், மதுவிலக்கு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட, 26 நான்கு சக்கர வாகனங்கள், 99 இருசக்கர வாகனங்கள், இரு, மூன்று சக்கர வாகனம் என மொத்தம், 127 வாகனங்கள் வரும், 20 காலை, 10:00 மணிக்கு, ஓசூர், மத்திகிரி கூட்ரோடு அருகே உள்ள மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு அலுவலகத்தில், பொது ஏலம் விடப்படுகிறது. நான்கு சக்கர வாகனங்களை ஏலம் எடுக்க விரும்புவோர், 10 ஆயிரம் ரூபாயும், இருசக்கர வாகனங்களுக்கு, 1,000 ரூபாயும் முன்வைப்பு தொகையாக வரும், 20 காலை, 9:30 மணிக்குள், ஏலம் நடக்கும் இடத்தில் செலுத்த வேண்டும். நான்கு சக்கர வாகனங்களை, கிருஷ்ணகிரி ஆயுதப்படை மைதானத்தில், பகல் நேரத்தில் சென்று பார்வையிடலாம். இருசக்கர வாகனங்களை, கிருஷ்ணகிரி, ஓசூர் மதுவிலக்கு அமலாக்க பிரிவு வளாகங்களில், பகலில் பார்க்கலாம். ஏலம் எடுக்கும் வாகனங்களுக்கு, ஏலத்தில் பணம் கட்டிய ரசீது மட்டுமே வழங்கப்படும். மேலும் விபரங்களுக்கு, ஓசூர் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு டி.எஸ்.பி., அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE