பொது செய்தி

தமிழ்நாடு

'ராணுவ ஆட்சேர்ப்பு முகாமில் பங்கேற்போருக்கு கொரோனா பரிசோதனை சான்று அவசியம்'

Added : ஜன 10, 2021
Share
Advertisement
திருவண்ணாமலை: ''திருவண்ணாமலையில் நடக்கும், ராணுவத்துக்கு ஆட்சேர்ப்பு முகாமில் பங்கேற்போருக்கு, கொரோனா பரிசோதனை சான்று அவசியம்,'' என, மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி கூறினார்.திருவண்ணாமலையில் நடக்கும், ராணுவ ஆட்சேர்ப்பு முகாம் முன்னேற்பாடு குறித்த ஆலோசனை கூட்டத்தை தொடர்ந்து, அவர், நிருபர்களிடம் கூறியதாவது: கடலூர், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை,

திருவண்ணாமலை: ''திருவண்ணாமலையில் நடக்கும், ராணுவத்துக்கு ஆட்சேர்ப்பு முகாமில் பங்கேற்போருக்கு, கொரோனா பரிசோதனை சான்று அவசியம்,'' என, மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி கூறினார்.


திருவண்ணாமலையில் நடக்கும், ராணுவ ஆட்சேர்ப்பு முகாம் முன்னேற்பாடு குறித்த ஆலோசனை கூட்டத்தை தொடர்ந்து, அவர், நிருபர்களிடம் கூறியதாவது: கடலூர், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, சென்னை, திருவள்ளூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் புதுச்சேரியை சேர்ந்தவர்களுக்கு, ராணுவத்துக்கான ஆட் சேர்ப்பு முகாம், திருவண்ணாமலையில் வரும் பிப்., 10ல் தொடங்கி, பிப்., 26வரை, நடக்கிறது. தொழில்பிரிவு, உதவி செவிலியர், கால்நடை பராமரிப்புக்கான உதவி செவிலியர், எழுத்தர், பொருட்கள் பாதுகாவலர் பணியிடங்களுக்கு தேர்வு நடக்கிறது. கடந்த மார்ச், 31ல் விண்ணப்பித்தவர்கள் மட்டுமே, இதில் பங்கேற்க முடியும். ஜன., 25க்கு பிறகு, ஆன்லைனில், www.joinindianarmy.nic.in என்ற இணையதள முகவரியில், ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். முகாமில் பங்கேற்க வருவோர், கொரோனா பரிசோதனை செய்து கொண்ட சான்றிதழ் கொண்டு வர வேண்டும். இல்லாதவர்கள், முகாமில் கொரோனா பரிசோதனை செய்த பின், அதன் முடிவு வந்த பின்னரே அனுமதிக்கப்படுவர். விண்ணப்பதாரர்கள், படிப்பு மதிப்பெண் சான்றிதழ்கள், குடியுரிமை, ஜாதி மற்றும் பிறப்பு சான்று, அசல் மற்றும் நகலுடன் வர வேண்டும். உடற் தகுதி தேர்வு, மருத்துவ பரிசோதனை நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினர். ஆலோசனை கூட்டத்தில், சென்னை ராணுவ ஆள் சேர்ப்பு அலுவலக இயக்குனர், கர்னல் கவுரவ் சேத்தி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X