பொது செய்தி

தமிழ்நாடு

எருது விடும் விழாவுக்கு காளைகள் தயார்படுத்தல்

Added : ஜன 10, 2021
Share
Advertisement
வேலூர்: வேலூர் மாவட்டத்தில், எருது விடும் விழாவுக்கு, காளைகள் தயார் படுத்தப்பட்டு வருகிறது.வேலூர் மாவட்டத்தில், பொங்கலையொட்டி எருது விடும் விழா, 43 இடங்களில் வரும், 14ல் இருந்து அடுத்த மாதம், 26 வரை நடத்த, மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கி உள்ளது. இதனால், கணியம்பாடி, காட்பாடி, லத்தேரி, குடியாத்தம், சோழவரத்தில், காளைகளை தயார் செய்யப்பட்டு வருகின்றன. இந்தாண்டு, 2,000 காளைகள் கலந்து

வேலூர்: வேலூர் மாவட்டத்தில், எருது விடும் விழாவுக்கு, காளைகள் தயார் படுத்தப்பட்டு வருகிறது.
வேலூர் மாவட்டத்தில், பொங்கலையொட்டி எருது விடும் விழா, 43 இடங்களில் வரும், 14ல் இருந்து அடுத்த மாதம், 26 வரை நடத்த, மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கி உள்ளது. இதனால், கணியம்பாடி, காட்பாடி, லத்தேரி, குடியாத்தம், சோழவரத்தில், காளைகளை தயார் செய்யப்பட்டு வருகின்றன. இந்தாண்டு, 2,000 காளைகள் கலந்து கொள்கின்றன. தேர்வு செய்யப்படும் காளைகளை, தினமும் குளிப்பாட்டி, மண் குவியல் கிளறுதல், நடை, ஓட்டம், நீச்சல், சீறிப்பாயும், முட்டித்தள்ளும் பயிற்சிகள் அளிக்கப் படுகின்றன. நவதானிய கூடு, தவிடு, புண்ணாக்கு, பால், நாட்டுக்கோழி முட்டை, பசுந்தீவனம் என, சத்தான உணவு வழங்கப்படுகின்றன. காளைகளின் கொம்புகளை சீவி விடுதல், லாடம் அடித்தல், வாலில் முடி வெட்டும் பணிகளும் நடக்கிறது. இதுகுறித்து, லத்தேரி காளை வளர்ப்போர் கூறியது: ஒரு நாட்டு காளையின் விலை, மூன்று லட்சம் ரூபாய். இதில், விழாவுக்கு தயார் செய்யவே, இரண்டு லட்சம் ரூபாய் வரை செலவாகிறது. இந்தாண்டு போட்டியில், கொம்பேரி மூக்கன், கடோத்கஜன், சைனா கொரோனா, குஷ்பு, அம்மணியம்மன் ஆகிய பெயர்களில் காளைகள் கலந்து கொள்கின்றன. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X