திருப்பத்தூர்: மருத்துவ படிப்பிற்கான எம்.பி.பி.எஸ்., 'சீட்' வாங்கி தருவதாக மோசடி செய்த, அரசு டாக்டர் உள்ளிட்ட இருவரை, திருப்பத்தூர் போலீசார் கைது செய்தனர்.
தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அடுத்த பாளையம்புதூரை சேர்ந்தவர், வரதராஜன், 50; ஓசூரிலுள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி, புஷ்பவல்லி, 45, இவரது, 20 வயது மகளை, எம்.பி.பி.எஸ்., படிக்க வைக்க, திருப்பத்தூர் அரசு மருத்துவமனை, ஓமியோபதி டாக்டரான ரவிச்சந்திரன், 44, என்பவரை கடந்த, 2018ல் புஷ்பவல்லி அணுகினார். அப்போது, ரவிச்சந்திரன் கேட்ட, 27 லட்சம் ரூபாயை கொடுத்துள்ளார். ஆனால் அவர், எம்.பி.பி.எஸ்., 'சீட்' வாங்கி கொடுக்காமலும், பணத்தை திரும்பி கேட்ட புஷ்பவல்லிக்கு, கொலை மிரட்டலும் விடுத்துள்ளார். இந்த மோசடிக்கு, ரவிச்சந்திரனின் உறவினர்கள் புதுப்பேட்டையை சேர்ந்த வெங்கடேசன், 40, அவரது மனைவி, திருப்பத்தூர் அரசு மருத்துவமனை செவிலியர் ராஜேஸ்வரி, 35, அம்மனாங்குட்டையை சேர்ந்த சரவணன், 45, அவரது மனைவி வித்யா, 35, ஆகியோர் உடந்தையாக இருந்துள்ளனர். இது குறித்து, புஷ்பவல்லி புகாரின்படி, திருப்பத்தூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து, நேற்று, ஓமியோபதி டாக்டர் ரவிச்சந்திரன் மற்றும் வெங்கடேசனை கைது செய்தனர். தலைமறைவான மற்றவர்களை தேடி வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE