மூணாறு : கேரளா மூணாறில் குளிர் அதிகரிக்கும் வேளையில் கடந்த 50 ஆண்டில் இல்லாத வகையில் ஜனவரியில் மழை பெய்து வருகிறது.
கேரளாவில் ஆண்டுதோறும் குளிர்காலம் நவம்பரில் துவங்கி பிப்ரவரி வரை நீடிக்கும். மாநிலத்தில் மற்ற பகுதிகளை விடமூணாறில் குளிர் கூடுதலாக இருக்கும். டிசம்பர் மற்றும் ஜனவரியில் வெப்பம் மைனஸ் டிகிரி செல்சியஸ் வரை குறைந்து உறைபனி ஏற்படும்.2019 ஜன.,1 முதல் 10 நாட்கள் பல்வேறு பகுதிகளில் வெப்பம் மைனஸ் -4 டிகிரி செல்சியஸ் வரை குறைந்து உறைபனி ஏற்பட்டது. தற்போது குளிர்காலம் என்ற போதும் கடந்த 50 ஆண்டில் இல்லாத வகையில் மழை பெய்து வருகிறது. ஜன., 1முதல் நேற்று வரை 5 செ.மீ., மழை பதிவானது.பகலில் மழை பெய்யும் போதிலும் காலையில் தேயிலைத் தோட்டங்களிலும்,மலைமுகடுகளிலும் தவழ்ந்து வரும் மேகங்கள் ரம்யமாக காட்சியளிக்கின்றன. குறிப்பாக கேரள-- தமிழக எல்லையான டாப் ஸ்டேஷனில் கடல் அலையை போன்று பரந்து கிடக்கும் மேகங்கள் வியப்பை ஏற்படுத்துகின்றன.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE