புதுடில்லி : புதிய வேளாண் சட்டங்கள், விவசாயிகளுக்கு நன்மை அளிக்கும் வகையில் அமைந்துள்ளதாக, உச்ச நீதிமன்றத்திற்கு, இந்திய விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு கடிதம் எழுதி உள்ளது.
மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக, டில்லி எல்லைப் பகுதியில், பஞ்சாப், ஹரியானா, உத்தர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள், தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பாப்டே தலைமையிலான அமர்வு, நாளை விசாரிக்க உள்ளது.
இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தில், இந்திய விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு, மனு ஒன்றை, நேற்று கடிதம் வாயிலாக அனுப்பிவைத்தது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:
மத்திய அரசின் மூன்று புதிய வேளாண் சட்டங்களும், விவசாயிகளுக்கு நன்மை அளிக்கும் வகையில் அமைந்துள்ளன. விவசாயிகளின் வருவாயை உயர்த்தி, வேளாண் துறையை மேம்படுத்தும் விதமாக, இந்த புதிய சீர்த்திருத்தங்கள் விளங்குகின்றன.அதிலுள்ள சில சீர்த்திருத்தங்களை மாற்ற எண்ணினால், அதற்கு முன், இதர விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளுடன் ஆலோசித்து, அவர்களிடம் இருந்து கருத்துக்களை மத்திய அரசு பெறவேண்டும். அதன்பிறகு, இறுதி முடிவு எடுக்கவேண்டும்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE