அரசியல் செய்தி

தமிழ்நாடு

அரசை விமர்சித்து பேசிய பெண் தலையாரி 'சஸ்பெண்ட்'

Added : ஜன 10, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
ஆத்துார் : தி.மு.க., நடத்திய மக்கள் கிராம சபை கூட்டத்தில், தமிழக அரசை விமர்சித்த, பெண் கிராம உதவியாளரின் வீடியோ, சமூக வலைதளங்களில் பரவியதையடுத்து, 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.சேலம் மாவட்டம், வாழப்பாடி, துக்கியாம்பாளையம் ஊராட்சி, ஆறாவது வார்டை சேர்ந்த, தி.மு.க., கிளை செயலர் சேகர். இவரது மனைவி கல்பனா, 40. இவர், கல்யாணகிரி வி.ஏ.ஓ., அலுவலகத்தில், கிராம உதவியாளராக பணிபுரிகிறார். சில
 அரசை விமர்சித்து பேசிய பெண் தலையாரி 'சஸ்பெண்ட்'

ஆத்துார் : தி.மு.க., நடத்திய மக்கள் கிராம சபை கூட்டத்தில், தமிழக அரசை விமர்சித்த, பெண் கிராம உதவியாளரின் வீடியோ, சமூக வலைதளங்களில் பரவியதையடுத்து, 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.

சேலம் மாவட்டம், வாழப்பாடி, துக்கியாம்பாளையம் ஊராட்சி, ஆறாவது வார்டை சேர்ந்த, தி.மு.க., கிளை செயலர் சேகர். இவரது மனைவி கல்பனா, 40. இவர், கல்யாணகிரி வி.ஏ.ஓ., அலுவலகத்தில், கிராம உதவியாளராக பணிபுரிகிறார். சில நாட்களுக்கு முன், ஏற்காடு தொகுதி, முளுவியில், தி.மு.க., சார்பில் நடந்த மக்கள் கிராம சபை கூட்டத்தில், 'மைக்' மூலம், தமிழக அரசின் திட்டங்களை விமர்சித்து பேசியுள்ளார். இந்த வீடியோ, சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
அதில், கல்பனா பேசுகையில், 'அ.தி.மு.க.,வை நிராகரிக்க வேண்டும். 2,500 ரூபாய் ஓட்டுக்கு கொடுப்பது தான் உண்மை. அ.தி.மு.க., 1,000 முதல், 5 லட்சம் ரூபாய் கொடுத்தாலும், ஸ்டாலினை தான் முதல்வராக்க வேண்டும்' என்றார்.இதுகுறித்து, கல்பனா கூறுகையில், ''தி.மு.க., கூட்டத்தில், அரசுக்கு எதிராக பேசவில்லை. கிராம உதவியாளராக ஆறு ஆண்டாக பணிபுரிகிறேன். நான், தி.மு.க.,வை சேர்ந்தவர் என்பதால் அழைப்பு கொடுத்தனர். தற்போது, ஏற்காடு தொகுதியில் போட்டியிட, தி.மு.க.,வில், 'சீட்' கேட்டுள்ளேன்,'' என்றார்.
இதுதொடர்பாக, துறைரீதியான விசாரணைக்கு, சேலம் கலெக்டர் ராமன் உத்தரவிட்டார். இதையடுத்து, கல்பனாவை, 'சஸ்பெண்ட்' செய்து, பெத்தநாயக்கன்பாளையம் தாசில்தார் வெங்கடேசன், நேற்று உத்தரவிட்டார்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
13-ஜன-202115:30:53 IST Report Abuse
Bhaskaran இந்த அம்மாவைப்போல் நேரடியாக பேசாமல் உள்குத்து குத்தும் அரசு ஊழியர்கள் தொண்ணூறு விழுக்காடு உள்ளனர் அவர்கள் ஓசைப்படாமல் அரசுக்கு எதிர்வினையாற்றுபவர்கள்
Rate this:
Cancel
Hari - chennai,சவுதி அரேபியா
12-ஜன-202118:51:32 IST Report Abuse
Hari இவரைப்போலத்தான் என்பது விழுக்காடு ,அரசு ஊழியர்கள் இருக்கிறார்கள் ,ஒன்று செய்யலாம் ராணுவத்தில் இருக்கும் நபர்களை கொண்டுவந்து இவர்கள் அனைவரையும் மாதம் ஐம்பது ஆயிரம் ஊழியர்கள் என்ற கணக்கில் தூக்கியாச்சுன்னா நல்லா இருக்கும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X