அரசை விமர்சித்து பேசிய பெண் தலையாரி சஸ்பெண்ட்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

அரசை விமர்சித்து பேசிய பெண் தலையாரி 'சஸ்பெண்ட்'

Added : ஜன 10, 2021 | கருத்துகள் (2)
Share
ஆத்துார் : தி.மு.க., நடத்திய மக்கள் கிராம சபை கூட்டத்தில், தமிழக அரசை விமர்சித்த, பெண் கிராம உதவியாளரின் வீடியோ, சமூக வலைதளங்களில் பரவியதையடுத்து, 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.சேலம் மாவட்டம், வாழப்பாடி, துக்கியாம்பாளையம் ஊராட்சி, ஆறாவது வார்டை சேர்ந்த, தி.மு.க., கிளை செயலர் சேகர். இவரது மனைவி கல்பனா, 40. இவர், கல்யாணகிரி வி.ஏ.ஓ., அலுவலகத்தில், கிராம உதவியாளராக பணிபுரிகிறார். சில
 அரசை விமர்சித்து பேசிய பெண் தலையாரி 'சஸ்பெண்ட்'

ஆத்துார் : தி.மு.க., நடத்திய மக்கள் கிராம சபை கூட்டத்தில், தமிழக அரசை விமர்சித்த, பெண் கிராம உதவியாளரின் வீடியோ, சமூக வலைதளங்களில் பரவியதையடுத்து, 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.

சேலம் மாவட்டம், வாழப்பாடி, துக்கியாம்பாளையம் ஊராட்சி, ஆறாவது வார்டை சேர்ந்த, தி.மு.க., கிளை செயலர் சேகர். இவரது மனைவி கல்பனா, 40. இவர், கல்யாணகிரி வி.ஏ.ஓ., அலுவலகத்தில், கிராம உதவியாளராக பணிபுரிகிறார். சில நாட்களுக்கு முன், ஏற்காடு தொகுதி, முளுவியில், தி.மு.க., சார்பில் நடந்த மக்கள் கிராம சபை கூட்டத்தில், 'மைக்' மூலம், தமிழக அரசின் திட்டங்களை விமர்சித்து பேசியுள்ளார். இந்த வீடியோ, சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
அதில், கல்பனா பேசுகையில், 'அ.தி.மு.க.,வை நிராகரிக்க வேண்டும். 2,500 ரூபாய் ஓட்டுக்கு கொடுப்பது தான் உண்மை. அ.தி.மு.க., 1,000 முதல், 5 லட்சம் ரூபாய் கொடுத்தாலும், ஸ்டாலினை தான் முதல்வராக்க வேண்டும்' என்றார்.இதுகுறித்து, கல்பனா கூறுகையில், ''தி.மு.க., கூட்டத்தில், அரசுக்கு எதிராக பேசவில்லை. கிராம உதவியாளராக ஆறு ஆண்டாக பணிபுரிகிறேன். நான், தி.மு.க.,வை சேர்ந்தவர் என்பதால் அழைப்பு கொடுத்தனர். தற்போது, ஏற்காடு தொகுதியில் போட்டியிட, தி.மு.க.,வில், 'சீட்' கேட்டுள்ளேன்,'' என்றார்.
இதுதொடர்பாக, துறைரீதியான விசாரணைக்கு, சேலம் கலெக்டர் ராமன் உத்தரவிட்டார். இதையடுத்து, கல்பனாவை, 'சஸ்பெண்ட்' செய்து, பெத்தநாயக்கன்பாளையம் தாசில்தார் வெங்கடேசன், நேற்று உத்தரவிட்டார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X