நாகப்பட்டினம் : ஹிந்து மத கடவுள்களை தொடர்ந்து கொச்சைப்படுத்தி வரும் திருமாவளவன் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, சிவசேனா கட்சி சார்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சிவசேனா கட்சி மாநில தலைவர் ரவிச்சந்திரன், மாநில செயலாளர் சுந்தரவடிவேலன் ஆகியோர் சென்னை, டி.ஜி.பி., அலுவலகத்திற்கு ஆன்லைன் வாயிலாக அனுப்பியுள்ள புகார் மனுவில் கூறியிருப்ப தாவது,,
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், ஹிந்து தெய்வங்களை கொச்சைப்படுத்தி பேசியுள்ளார். ஹிந்து மதத்தின் மாண்பை, நற்பெயரை வளர்ச்சியை தடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பேசியுள்ளார். இது அடுத்தவரின் மதச் சுதந்திரத்தில், மத வழிபாட்டில் குறுக்கீடு செய்யும் குற்றமாகும். அவரது கட்சித் தொண்டர்கள் திருமாவளவன் பேச்சினை சமூக ஊடகங்களில் தொடர்ந்து பரப்பி வருகின்றனர்.தொடர்ந்து ஹிந்து மதத்தின் பெருமையை கெடுக்கும் விதத்தில் பேசி வருகிறார். இது அவரது எம்.பி., பதவி பிரமாணத்திற்கு எதிரானதாகும். இந்தியாவின் தேசிய ஒருமைப்பாட்டிற்கும், மத நல்லிணக்கத்திற்கு எதிரானது. எனவே திருமாவளவன் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுத்து கைது செய்ய வண்டும்.
இவ்வாறு புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE