கடலுார் : ''ஹிந்து கடவுள்களை தொடர்ந்து அவதுாறாக பேசி வரும் திருமாவளவன் தமிழகத்தில் பிறந்தவர் எனக் கூறுவதற்கே வெட்கமாக உள்ளது'' என பா.ஜ., கலை கலாசார பிரிவு மாநில தலைவர் காயத்ரி ரகுராம் கூறினார்.
கடலுாரில் பா.ஜ. சார்பில் நடந்த 'நம்ம ஊரு பொங்கல்' விழாவில் அவர் பேசியதாவது:
பிரதமர் நரேந்திர மோடி மக்களுக்கு பல்வேறு நல்ல திட்டங்களை கொண்டு வந்துள்ளார். அதை மக்களிடம் பா.ஜ.,வினர் கொண்டு செல்ல வேண்டும்.விவசாயிகள் நலனில் அக்கறை காட்டுவதால் ஆண்டுக்கு ௬௦௦௦ ரூபாய் கொடுக்கிறார்.விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருட்களுக்கு அவர்களே விலை நிர்ணயம் செய்யும் சுதந்திரம் கொடுக்கப்பட்டு உள்ளது.ஹிந்து கடவுள் பற்றியும் ஹிந்து மக்கள் பற்றியும் திருமாவளவன் போன்றோர் பேசி பணம் சம்பாதிக்கின்றனர்.அவர்கள் எத்தனை முறை சொன்னாலும் அப்படித் தான் பேசப் போறாங்க அவர்களை எவ்வளவு திட்டினாலும் சொரணை இல்லை. அவர் தமிழகத்தில் பிறந்தவர் என்று சொல்வதற்கே வெட்கமாக உள்ளது.
இவ்வாறு காயத்ரி ரகுராம் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE