அன்பிற்கனிய வாசகர்களே...
தமிழர் தைத்திருநாளாம் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள். நீங்கள் அபார்ட்மென்ட் கேட்டெட் கம்யூனிட்டி, ஹவுசிங் யூனிட் மற்றும் காலனி நகர், ஊர் கிராமம் என எங்கு வசிப்பவர்களாக இருப்பினும், ‛ சமுதாய பொங்கல் விழா போட்டி'யில் பங்கேற்கலாம்.
வரும் 14ம் தேதி பொங்கல் அன்று, நண்பர்கள், உறவினர், அண்டை வீட்டாருடன் குடும்பம் சகிதமாக ஓரிடத்தில் கூடி, பொங்கலிட்டு, ‛சமுதாய பொங்கல்‛ விழா கொண்டாடுங்கள். இவ்வினிய விழாவினை 2 நிமிட வீடியோ எடுத்து, அன்றைய தினமே காலை 8:00 முதல் மாலை 5:00 மணிக்குள் டெலிகிராம் செயலி வாயிலாக 87547 06222 என்ற எண்ணுக்கு அனுப்புங்கள். எவ்வளவு பேர் பங்கேற்றனர் எவ்வாறு ஒருங்கிணைத்தீர்கள், கொண்டாட்டம் எவ்வாறு வித்தியாசமானதாக அமைந்தது, என்ற கருத்தினையும் கட்டாயம் சேர்த்து அனுப்புங்கள்.
சிறந்த 10 கொண்டாட்ட வீடியோக்களுக்கு, தலா ரூ.10 ஆயிரம் வீதம் பரிசு காத்திருக்கிறது.
வீடியோ அனுப்ப நீங்கள் செய்ய வேண்டியது
* Dmrnxt.in/t டைப் செய்து ஓபன் செய்யவும்
* அதில் உள்ள லிங்கை கிளிக் செய்து டெலிகிராம் ஆப்ஐ டவுன்லோட் செய்யவும்.
* டெலிகிராம் ஆப் தினமலர் சேனலில் join கிளிக் செய்து, https://t.me/dinamalardaily - ல் நுழையவும்
* போட்டிக்கான உங்கள் வீடியோவை 8754706222 எண்ணுக்கு டெலிகிராம் வாயிலாக அனுப்பவும்
* 10 குழுவினருக்கு தலா ரூ.10 ஆயிரம்
* இன, மத, மொழி வேறுபாடின்றி யாவரும் பங்கேற்கலாம்
போட்டி விதிகள்
* ‛சமுதாய பொங்கல்' பல குடும்பங்கள் ஒன்றணைந்து நடததும் விழா. தனி நபர், தனிப்பட்ட குடும்பத்தினரின் கொண்டாட் வீடியோக்கள் போட்டிக்கு ஏற்புடையதல்ல.
* இரண்டு நிமிட வீடியோ என்பது, பொங்கல் விழா கொண்டாட்டத்தை மையப்படுத்தி இருக்க வேண்டும்
* போட்டியாளர்கள், தங்களுக்கு தொடர்பில்லாத கொண்டாட்டங்கள், நபர்களின் வீடியோக்களை அனுப்பக்கூடாது.
* போட்டியில் வெற்றி பெற்று, தினமலர் டெலிகிராம் தளத்தில் வெளியாகும் வீடியோக்களுக்கு, அதை அனுப்பியவரே பொறுப்பு..
* பொங்கல் விழாவில், ஒரு குழுவில் குறைந்தது, 10 குடும்பத்தினராவது இடம்பெற வேண்டும்.
* போட்டி தொடர்பாக, தேர்வுக்குழுவின் முடிவே இறுதியானது.




தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE