வி.கே.டி., சாலை விரிவாக்கப்பணி தொய்வால் வாகன ஓட்டிகள் அவதி

Added : ஜன 10, 2021
Share
Advertisement
விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி- கும்ப கோணம் - தஞ்சாவூர் (வி.கே.டி.,) நான்கு வழிச் சாலை விரிவாக்கப் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே தொடரும் மழையால் படுமோசமான சாலையில் பயணிக்க முடியாமல் வாகன ஓட்டிகள் அவதி அடைந்துள்ளனர். விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி முதல் கும்பகோணம், தஞ்சாவூர் வரை (வி.கே.டி) நான்கு வழிச்சாலை அமைக்கும் பணி நடக்கிறது. இத் திட்டத்திற்கு மத்திய
வி.கே.டி., சாலை விரிவாக்கப்பணி தொய்வால் வாகன ஓட்டிகள் அவதி

விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி- கும்ப கோணம் - தஞ்சாவூர் (வி.கே.டி.,) நான்கு வழிச் சாலை விரிவாக்கப் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே தொடரும் மழையால் படுமோசமான சாலையில் பயணிக்க முடியாமல் வாகன ஓட்டிகள் அவதி அடைந்துள்ளனர்.

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி முதல் கும்பகோணம், தஞ்சாவூர் வரை (வி.கே.டி) நான்கு வழிச்சாலை அமைக்கும் பணி நடக்கிறது. இத் திட்டத்திற்கு மத்திய அரசு ரூ.711 கோடி ஒதுக்கீடு செய்தது.66 கி.மீ., துாரம்விக்கிரவாண்டி - சேத்தியாதோப்பு, பின்ன லுார் வரை 66 கி.மீ., துாரம் நான்கு வழிச்சாலை பணிக்கு மத்திய அரசு ரூ.711 கோடி ஒதுக்கீடு செய்தது. இப்பணியை 2 ஆண்டுகளில் முடிக்க திட்டமிடப்பட்டது. இதற்காக மும்பை ரிலையன்ஸ் இன்பிரா ஸ்ட்ரெக்சர் லிட் என்ற நிறுவனம் நகாயுடன் ஒப்பந்தம் செய்தது. 2018 ஜன.8ல் பணி தொடங்கியது.
நில ஆர்ஜிதம் உள்ளிட்ட பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டது. இத்திட்டப்பகுதியில் 90 குறும்பாலங்கள், 25 தரைப் பாலங்கள், 3 மேம்பாலங்கள், 3 ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி நடக்கிறது .விக்கிரவாண்டியில் இருந்து 45 கி.மீ., துாரத்திற்கு சாலையின் கிழக்கு பகுதியில் பெரும்பாலான பணிகள் முடிவடைந்துள்ளது. கடந்த ஆண்டு மார்ச் வரை பணிகள் விரைவாக நடந்தது. கொரோனா பரவல் காரணமாக வடமாநில தொழிலாளர்கள் 85 சதவீதம் பேர் சொந்த ஊர் திரும்பினர். அதோடு நவம்பர் மாதம் முதல் பெய்து வரும் தொடர் மழையாலும் சாலைப்பணியில் தொய்வுஏற்பட்டது.
3 மணி நேரம் அவதி
மழை தொடர்வதால் பழைய சாலைகள் போக்குவரத்திற்கு பயன்படுத்த முடியாத அளவிற்கு சேதமடைந்துள்ளது. கனரக வாகனங்கள் சென்று வருவதால், சாலையில் ஆங்காங்கே மிகப் பெரிய பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. இதனால் வாகனங்கள் மிகுந்த சிரமங்களுக்கிடையே செல்கின்றன. இச்சாலை மோசமாக உள் ளதை அறியாத வெளியூர்வாசிகள், இரவு நேரங்களில் செல்லும் போது விபத்தில் சிக்குகின்றனர். உயிரிழப்பும் அதிகரித்துள்ளது.விக்கிரவாண்டியிலிருந்து சேத்தியாதோப்பிற்கு 66 கி.மீ., துாரம், காரில் செல்ல 3 மணி நேரம் பயணிக்க வேண்டிய நிலை உள்ளது. இதனால் பலர் திருச்சி வழியாக சுற்றி தஞ்சாவூர் செல்கின்றனர்.
இதன் மூலம், கூடுதலாக 50 கி.மீ., துாரம் பயண நேரம் மற்றும் எரிபொருள் அதிகரித்து மிகுந்த அவதிக்குள்ளாகின்றனர்.தீர்வு வேண்டும்தொடர் மழையால் சேதமடைந்துள்ள சாலைகளில், தற்காலிக தீர்வாக ஜல்லி அல்லது பார் மண் கொட்டி சீரமைக்க வேண்டும். விக்கிரவாண்டி - கும்ப கோணம் - தஞ்சாவூர் நான்கு வழிச் சாலை பணிகளை, 2018ல் துவங்கி 2020ல் முடிக்க, நகாய் திட்டமிட்டிருந்தது. கொரோனா, தொடர் மழை போன்ற காரணங்களால் தொய்வு ஏற்பட்டுள்ளது. எனவே 2022ம் ஆண்டு மத்தியில் தான் நான்கு வழிச் சாலை பணிகள் முழுமையடையும் நிலை உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X