புதுச்சேரி : புதுச்சேரியில் சலானி தங்க வைர நகை கண்காட்சி இன்றுடன் நிறைவு பெறுகிறது.
சென்னை தி.நகரில் உள்ள சலானி ஜூவல்லரி மார்ட் தமிழகம் முழுவதும் நகை கண்காட்சியை நடத்தி வருகிறது. புதுச்சேரியில் முதல்முறையாக அண்ணாசாலையில் உள்ள அபிராமி ரெசிடன்சி டவரில் கடந்த 8 ம் தேதி கண்காட்சி துவங்கியது. கண்காட்சியில் தங்கம், வைரம் பதித்த லைட் வெயிட் தங்க நகைகள், வெள்ளி நகைகள் கண்காட்சிக்கும் விற்பனைக்கும் வைக்கப்பட்டுள்ளன.பழைய தங்க நகைகள், தங்க நாணயத்தை இன்றைக்கு மார்க்கெட் விலைக்கு கொடுத்து புத்தம் புதிய நகைகளாக வாங்கிக் கொள்ளும் வசதியும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பழங்கால தொண்மை கலைநயத்துடன் ஆன்டிக் நகைகள் விற்பனைக்கு குவிந்துள்ளன. பிரமாண்டத்திற்கு பெயர் போன ஜடாவ் போல்கி நகைகள் கண்காட்சியில் இடம் பிடித்துள்ளது.இது தவிர வெள்ளியில் செய்த குழந்தைகளுக்கான பால் பாட்டில், கிண்ணம் இடம் பெற்றுள்ளன. இன்று 10 ம் தேதியுடன் முடியும் கண்காட்சியை காலை 10 முதல் இரவு 8 மணி வரை பார்வையிடலாம்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE