திருச்செங்கோடு: சத்தீஸ்கர் மாநிலத்தில் இருந்து, திருப்பூர் மாவட்டம், புகளூர் வரை, 800 கிலோ வாட் உயரழுத்த மின்சாரம் கொண்டு செல்ல மின்கோபுரம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. நிலங்களில் மின் கோபுரம் அமைப்பதற்கு விவசாயிகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். சாலையோரங்களில் புதைவட கம்பி மூலம் உயரழுத்த மின்சாரத்தை கொண்டு செல்ல வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில், நில மதிப்பீட்டை உயர்த்தி வழங்க வேண்டும் எனவும், விவசாய நிலங்களில் உள்ள மரங்கள் உயர் மின்னழுத்த கோபுரம் போடும்போது இருந்த பயிர்கள் போன்றவற்றுக்கு இதுவரை இழப்பீடு வழங்காமல் இழுத்தடிக்கப்படுவதாகவும் புகார் தெரிவித்து, திருச்செங்கோடு அடுத்த, பட்லூர் கிராமத்தில், வயல்களில் இறங்கி விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். விவசாயிகளின் கூட்டு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பெருமாள் தலைமை வகித்தார். கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் கோஷமிட்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE