நாமக்கல்: 'கற்போம்-எழுதுவோம் திட்டப்பணிகளில் இருந்து, தலைமையாசிரியர், ஆசிரியர்களை முழுமையாக விடுவிக்க வேண்டும்' என, மாவட்ட மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின், மாவட்ட ஆசிரியர் கோரிக்கை மாநாடு, நாமக்கல்லில் நடந்தது. மாவட்ட தலைவர் ஆசைத்தம்பி தலைமை வகித்தார். மாநில பொதுச்செயலாளர் சண்முகநாதன், செயலாளர் செல்வராசன், தி.மு.க., கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் ராஜேஷ்குமார் பேசினர். ஜாக்டோ-ஜியோ காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் பங்கேற்ற ஆசிரியர், அரசு ஊழியர்கள் மீது, புனையப்பட்டுள்ள குற்றவியல் வழக்குகள், ஒழுங்கு நடவடிக்கைகளை ரத்து செய்ய வேண்டும். ஊதியப்பிடித்தம், பறிக்கப்பட்டுள்ள ஆண்டு ஊதிய உயர்வு, தேர்வு நிலை, சிறப்பு நிலை ஊதியம் மற்றும் பதவி உயர்வுகளை திரும்ப வழங்க வேண்டும். பழைய ஓய்வூதியத் திட்டத்தை தொடர வேண்டும். வயது உச்சவரம்பின்றி, ஆசிரியர் பணி நியமனங்கள் நடக்க வேண்டும். வாழ்நாள் தகுதி சான்று வழங்கி, ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள, 80 ஆயிரம் பேருக்கு, பணி வாய்ப்பு வழங்க வேண்டும். கற்போம்-எழுதுவோம் திட்டப்பணிகளில் இருந்து, தலைமையாசிரியர், ஆசிரியர்களை முழுமையாக விடுவிக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE