பொது செய்தி

தமிழ்நாடு

பிலிக்கல்பாளையத்தில் வெல்ல ஏலம்

Added : ஜன 10, 2021
Share
Advertisement
ப.வேலூர்: நாமக்கல் மாவட்டம், ஜேடர்பாளையம், சோழசிராமணி, அய்யம்பாளையம், கபிலர்மலை, பரமத்தி, ப.வேலூர், பாண்டமங்கலம், நன்செய் இடையாறு உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான ஏக்கரில் கரும்பு சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இப்பகுதிகளில் விளையும் கரும்புகளை கரும்பு ஆலை உரிமையாளர்கள் வாங்கி வந்து உருண்டை வெல்லம், அச்சு வெல்லம், நாட்டுச் சர்க்கரை ஆகியவற்றை தயார் செய்கின்றனர். பின்னர்

ப.வேலூர்: நாமக்கல் மாவட்டம், ஜேடர்பாளையம், சோழசிராமணி, அய்யம்பாளையம், கபிலர்மலை, பரமத்தி, ப.வேலூர், பாண்டமங்கலம், நன்செய் இடையாறு உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான ஏக்கரில் கரும்பு சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இப்பகுதிகளில் விளையும் கரும்புகளை கரும்பு ஆலை உரிமையாளர்கள் வாங்கி வந்து உருண்டை வெல்லம், அச்சு வெல்லம், நாட்டுச் சர்க்கரை ஆகியவற்றை தயார் செய்கின்றனர். பின்னர் அவற்றை, 30 கிலோ கொண்ட சிப்பங்களாக கட்டி, பிலிக்கல்பாளையம் வெல்ல ஏலச் சந்தைக்கு கொண்டு வருகின்றனர். சனி, புதன்கிழமையில் ஏலம் நடைபெறுகிறது. தரத்திற்கேற்ப விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. நேற்று, அச்சு வெல்லம் முதல் தரம், 1,370; இரண்டாம் தரம், 1,340; மூன்றாம் தரம், 1,300 ரூபாய்; உருண்டை வெல்லம், 1,270 - 1,250 - 1,200 ரூபாய் என ஏலம் போனது. இதில் அச்சு வெல்லம், 6,800 சிப்பங்களும், உருண்டை வெல்லம், 5,800 சிப்பங்களும் வரத்தாகின. வரும் ஆண்டுகளில், தமிழக அரசு பொங்கல் பரிசு தொகுப்புடன் வெல்லத்தையும் கொள்முதல் செய்து மக்களுக்கு வழங்கினால் தங்களின் வாழ்வாதாரம் மேம்படுமென, உற்பத்தியாளர்களிடமிருந்து கோரிக்கை எழுந்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X