ப.வேலூர்: வேலகவுண்டம்பட்டியில், வீட்டின் முன் நிறுத்தப்பட்ட சரக்கு ஆட்டோவை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். ப.வேலூர் அடுத்த, வேலகவுண்டம்பட்டி, கொங்கு நகரைச் சேர்ந்தவர் ரமேஷ்,43; இவர், தன் சரக்கு ஆட்டோவில் ஜவுளிகளை ஏற்றி, டிச.,29 இரவு, 9:30 மணியளவில் வீட்டின் முன் ஆட்டோவை நிறுத்தி விட்டு சென்றார். மறுநாள் காலை, 6:30 மணியளவில், ஆட்டோவை காணவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காததால், போலீசில் புகாரளித்தார். வேலகவுண்டம்பட்டி போலீசார் வழக்கு பதிந்து ஆட்டோவை தேடி வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE