கரூர்: மாரியம்மன் கோவிலில் வரும், 27ல் மஹா கும்பாபி?ஷகம் நடக்கிறது. கரூர் நகரில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. ஆண்டுதோறும் மே மாதம், மாரியம்மன் திருவிழா நடப்பது வழக்கம். கடந்தாண்டு, கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில், தளர்வுகள் இல்லாத, ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்ததால், திருவிழா ரத்து செய்யப்பட்டது. தற்போது, ஊரடங்கு உத்தரவில் தளர்வு அறிவிக்கப்பட்ட நிலையில், கடந்த மாதம் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் மஹா கும்பாபி?ஷகம் நடத்தப்பட்டது. அதையடுத்து, மாரியம்மன் கோவிலிலும் கும்பாபி?ஷகம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி வரும், 24ல் மங்கள இசை மற்று கணபதி பூஜையுடன் கும்பாபி?ஷக விழா துவங்குகிறது. தொடர்ந்து, 25,26ல் யாகசாலை பூஜை; 27 அதிகாலை, 4:00 மணிக்கு திருமுறை இசையுடன் விழா துவங்கி, 10:45 மணிக்கு மஹா கும்பாபி?ஷகம் நடக்கிறது. மாலை, 6:00 மணிக்கு மாரியம்மன் தங்கரதத்தில் தீபாராதனை, 6:30 மணிக்கு திருவீதி உலா, இரவு, 7:15 மணிக்கு ஊஞ்சல் உற்சவம் ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கின்றன.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE