பொது செய்தி

தமிழ்நாடு

குடியரசு தின விழா ஏற்பாடு ஆலோசனை கூட்டம்

Added : ஜன 10, 2021
Share
Advertisement
கரூர்: கரூர் கலெக்டர் அலுவலகத்தில், குடியரசு தின விழா முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது. டி.ஆர்.ஓ., ராஜேந்திரன் தலைமை வகித்து பேசியதாவது: மாவட்ட விளையாட்டு மைதானத்தை நல்ல முறையில் பராமரித்து சீர்செய்து வழங்கும் பணியை நகராட்சி துறையினர் மேற்கொள்ள வேண்டும். மைதானத்தில் தடுப்பு வாகனம் மற்றும் சுகாதாரத்துறையின் அவசர ஊர்தியை பாதுகாப்பு கருதி தயார்

கரூர்: கரூர் கலெக்டர் அலுவலகத்தில், குடியரசு தின விழா முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது. டி.ஆர்.ஓ., ராஜேந்திரன் தலைமை வகித்து பேசியதாவது: மாவட்ட விளையாட்டு மைதானத்தை நல்ல முறையில் பராமரித்து சீர்செய்து வழங்கும் பணியை நகராட்சி துறையினர் மேற்கொள்ள வேண்டும். மைதானத்தில் தடுப்பு வாகனம் மற்றும் சுகாதாரத்துறையின் அவசர ஊர்தியை பாதுகாப்பு கருதி தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். முக்கிய பிரமுகர்கள் மற்றும் பார்வையாளர்கள் அமர ஏதுவாக சாமியானா பந்தல் அமைத்தல், விளையாட்டு மைதானத்தில் குடிநீர், நடமாடும் கழிப்பறைகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நகராட்சி நிர்வாகம் ஏற்பாடு செய்ய வேண்டும். அரசு அலுவலர்கள், பயனாளிகள், பொதுமக்கள் அனைவரும் கண்டிப்பாக முக கவசம் அணிந்து பங்கேற்க வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார். கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சந்தியா, ஆர்.டி.ஓ., பாலசுப்ர மணியன், மாவட்ட வழங்கல் அலுவலர் ஹஸ்ரத் பேகம், நகராட்சி ஆணையர் சுதா உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X