சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மின்சாரம் தாக்கிய வாலிபரின் மருத்துவ செலவை ஏற்கக்கோரி உறவினர் மறியல்

Added : ஜன 10, 2021
Share
Advertisement
கரூர்: கரூர் அருகே, மின்சாரம் தாக்கியதில் காயமடைந்த, பொறியியல் பட்டதாரி யின் மருத்துவ செலவை ஏற்கக்கோரி, அவரது உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.கரூர் மாவட்டம், பள்ளப்பாளையம் பகுதியை சேர்ந்த மயில்ராஜ் மகன் கோபி, 25; பொறியியல் பட்டதாரி. பெயின்ட் அடிக்கும் தொழில் செய்து வருகிறார். கடந்த, 6ல் சுக்காலியூரில் உள்ள தனியார் கான்கிரீட் நிறுவனத்தில் பணி புரிந்து

கரூர்: கரூர் அருகே, மின்சாரம் தாக்கியதில் காயமடைந்த, பொறியியல் பட்டதாரி யின் மருத்துவ செலவை ஏற்கக்கோரி, அவரது உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கரூர் மாவட்டம், பள்ளப்பாளையம் பகுதியை சேர்ந்த மயில்ராஜ் மகன் கோபி, 25; பொறியியல் பட்டதாரி. பெயின்ட் அடிக்கும் தொழில் செய்து வருகிறார். கடந்த, 6ல் சுக்காலியூரில் உள்ள தனியார் கான்கிரீட் நிறுவனத்தில் பணி புரிந்து கொண்டிருந்தார். அப்போது, மின்சாரம் தாக்கியதில் காயமடைந்து, கோவை தனியார் மருத்துவமனையில், ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், 'அவர் பணி புரிந்த தனியார் கான்கிரீட் நிறுவனம், கோபியின் மருத்துவ செலவை ஏற்க வேண்டும்' எனக் கூறி, உறவினர்கள் நேற்று காலை, 10:15 மணிக்கு, திருக்காம்புலியூரில் சாலை மறியலில் ஈடுபட்டனர். கரூர் டவுன் டி.எஸ்.பி., முகேஷ் ஜெயக்குமார், போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் மாரிமுத்து, எஸ்.ஐ., அழகுராம் ஆகியோர், மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். இதையடுத்து, சாலை மறியல் கைவிடப்பட்டது. இதனால், அரைமணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X