ஈரோடு: ஈரோடு மாவட்டம் சித்தோடு வெல்லம் மார்க்கெட்டில், நேற்று நடந்த ஏலத்தில், நாட்டு சர்க்கரை, வெல்லம், கிலோவுக்கு, 90 ரூபாய் வரை விலை உயர்ந்தது.
இதுகுறித்து வியாபாரிகள் கூறியதாவது: ஏலத்தில், 30 கிலோ எடை கொண்ட, 1,200 நாட்டு சர்க்கரை மூட்டை வரத்தாகி, ஒரு மூட்டை, 1,130 ரூபாய் முதல், 1,250 ரூபாய்; இதேபோல் உருண்டை வெல்லம், 4,150 மூட்டை வரத்தாகி, ஒரு மூட்டை, 1,210 ரூபாய் முதல், 1,310 ரூபாய்; அச்சு வெல்லம், 500 மூட்டை வரத்தாகி, ஒரு மூட்டை, 1,240 ரூபாய் முதல், 1,380 ரூபாய் வரை விற்பனையானது. கடந்த வாரத்தை ஒப்பிடுகையில், நாட்டு சர்க்கரை மற்றும் வெல்லம், மூட்டைக்கு, 60 ரூபாய் முதல், 90 ரூபாய் வரை விலை உயர்ந்தது. பொங்கல் பண்டிகை வருவதே இதற்கு காரணம். பொங்கல் பண்டிகையால் வரும், 16ல் வெல்லம், நாட்டு சர்க்கரை ஏலத்துக்கு விடுமுறை விடுக்கப்படுகிறது. இவ்வாறு வியாபாரிகள் கூறினர்.
* ஈரோடு மாவட்டம், கவுந்தப்பாடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், நாட்டு சர்க்கரை ஏலம் நேற்று நடந்தது. மொத்தம், 531 மூட்டை வரத்தானது. இரண்டாம் தரம் (மீடியம்) குறைந்தபட்சம், 2,360 ரூபாய், அதிகபட்சம், 2,380 ரூபாய்க்கும் விற்பனையானது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE