ஈரோடு: நிஜாமாபாத்தில், 30 சதவீத அறுவடை, ஆந்திரா அரசு கொள்முதல் செய்த மஞ்சளை விற்பனை செய்வதால், ஈரோடு பகுதியில் மஞ்சள் விலை சரிந்துள்ளது.
இதுகுறித்து ஈரோடு மஞ்சள் வணிகர்கள் மற்றும் கிடங்கு உரிமையாளர்கள் சங்க செயலாளர் சத்தியமூர்த்தி கூறியதாவது: கடந்தாண்டு ஆந்திரா அரசு, விவசாயிகளிடம் இருந்து, குறைந்தபட்ச ஆதார விலையில் மஞ்சளை கொள்முதல் செய்தது. அதை தற்போது விற்பனை செய்கிறது. அதேசமயம் நிஜாமாபாத்தில் புது மஞ்சள் அறுவடை நடந்து வருகிறது. ஈரோடு பகுதியில் பொங்கலுக்குப் பிறகே வரத்தாகும். பொங்கலுக்கு இன்னும் சில நாட்களே உள்ளதால், புது மஞ்சள் வந்தால், பழைய மஞ்சள் விலை குறையும். இதனால் அதிகமாக இருப்பு வைத்துள்ளவர்கள், விற்பனைக்கு கொண்டு வருவதால், குவிண்டால், 4,500 ரூபாய் முதல், 6,000 ரூபாயாகவே தொடர்கிறது. இலங்கையில் இறக்குமதிக்கு தடை இருப்பதால், அங்கு உற்பத்தியை தீவிரப்படுத்தி உள்ளனர். இங்கு கிலோ, 60 ரூபாய்க்கு விற்கும் மஞ்சள், 2,000 ரூபாய்க்கு மேல் அங்கு விற்கிறது. இச்சூழலில் புது மஞ்சள் வரத்தாகும்போது, விலை உயரும். பழைய மஞ்சள் வரத்து அதிகரிகமானால், விலை சராசரியாக இருக்கும் என எதிர்பார்க்கிறோம். நடப்பாண்டும், விலை குறைவாக இருந்ததால், மஞ்சள் சாகுபடி பரப்பு குறைந்தே காணப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE