பொது செய்தி

தமிழ்நாடு

பறவைக் காய்ச்சல் குறித்த தவறான தகவல்: மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த 'நெக்' கோரிக்கை

Added : ஜன 10, 2021
Share
Advertisement
நாமக்கல்: 'பறவைக் காய்ச்சல் குறித்த தவறான தகவல்களால் ஏற்படும் பீதியில் இருந்து, பொதுமக்களை காப்பாற்ற, மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு (நெக்), நாமக்கல் மண்டலத் தலைவர் செல்வராஜ் தெரிவித்துள்ளார்.அவரது அறிக்கை: கடந்த, 2006ல், முதல் முறையாக, பறவைக் காய்ச்சல் இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டது. இன்று வரை, நாடு முழுவதும், 25

நாமக்கல்: 'பறவைக் காய்ச்சல் குறித்த தவறான தகவல்களால் ஏற்படும் பீதியில் இருந்து, பொதுமக்களை காப்பாற்ற, மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு (நெக்), நாமக்கல் மண்டலத் தலைவர் செல்வராஜ் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை: கடந்த, 2006ல், முதல் முறையாக, பறவைக் காய்ச்சல் இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டது. இன்று வரை, நாடு முழுவதும், 25 முறை வந்துள்ள பறவைக் காய்ச்சல், வட இந்தியாவில், சில மாநிலங்களிலும், தென் இந்தியாவில், கேரளா, கர்நாடகாவிலும் வந்துள்ளது. ஆனால், இன்று வரை, பறவைக் காய்ச்சல் காரணமாக, மனிதர்களுக்கு எந்த வித நோய் தாக்குதலும் ஏற்படவில்லை என்பது உண்மை. பறவைக் காய்ச்சல் பற்றிய தவறான புரிதல், மக்களுக்கு ஏற்பட்டுள்ளதன் மூலம், முட்டை, கோழியின் நுகர்வு, ஓரளவு பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது, தமிழக அரசு எடுத்து வரும் நோய் தடுப்பு முன் எச்சரிக்கை நடவடிக்கை காரணமாக, தமிழகத்தில் இதுவரை, பறவை காய்ச்சல் தாக்குதல் இல்லை. 2006ல் இருந்து, பறவைக் காய்ச்சல் நோய் தாக்குதலுக்கு ஆளான, கேரளா, கர்நாடகா போன்ற அண்டை மாநிலங்களில், நோய் தாக்குதல், மனிதர்களுக்கு இல்லை என்பதால், பறவைக் காய்ச்சல் குறித்த விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. சில வட இந்திய மாநிலங்களில், இப்போது தான் முதன் முறையாக பறவைக் காய்ச்சல் வந்துள்ளது. அதனால், அம்மாநில அரசுகள், பறவைக் காய்ச்சல் பற்றிய போதிய விழிப்புணர்வு இல்லாததால், தெளிவில்லாமல் முட்டை, இறைச்சி கடைகளை தற்காலிகமாக மூட உத்தரவிட்டுள்ளன. அதன் காரணமாக, முட்டை மற்றும் இறைச்சி விலை, அந்த மாநிலங்களில் அதிகமாக குறைந்துள்ளது. இந்த விலை குறைப்பு, இந்தியா முழுவதும் எதிரொலிக்கிறது. மத்திய, மாநில அரசுகள், முட்டை மற்றும் இறைச்சி உட்கொள்வதால் பறவை காய்ச்சல் பரவாது என்ற உண்மையை, பொது மக்களுக்கு தெரிவித்து, பொது மக்களை அனாவசிய பீதியில் இருந்து காப்பாற்ற வேண்டும். மேலும், நமது உணவு சமைக்கும் முறை மூலம், இந்நோய் பரவுவதற்கான வாய்ப்பு இல்லை என்ற உண்மையையும், மத்திய, மாநில அரசுகள், பொது மக்களுக்கு தெரிவிக்க வேண்டும். இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X