* பஞ்சாப் மாநிலத்தின் தேரா பஸ்ஸி என்ற பகுதியில் காரில் மனைவியை விட்டு சென்ற கணவன் திரும்பி வந்தபோது காரை காணவில்லை. காரை கடத்திய நபர்கள் அந்த பெண்ணுடன் கடத்தி சென்றனர். சிறிது தூரம் சென்ற பின் இறக்கி விட்டு சென்று விட்டனர்.

* ஜார்கண்டில் 50 வயது பெண்ணை மூன்று இளைஞர்கள், கூட்டாக பாலியல் பலாத்காரம் செய்து தாக்கிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
* மும்பை நாக்பூரில் விடுதியில் தங்கி தகாத உறவு கொண்ட 30 வயது மதிக்கத்தக்க ஆண் மர்ம மரணம். இந்த கள்ளகாதலன் கழுத்தில் கயிறு கட்டி பெண் உல்லாசமாக இருக்க முயற்சி செய்துள்ளார். வீடியோ பார்த்து இவ்வாறு ஈடுபட்டுள்ளதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.
* உ.பி.,மாநிலம் பேட்பூரில் சகோதார உறவு கொண்டவரை திருமணம் செய்த மகளை தந்தை சுட்டு கொன்றார்.

* தெலுங்கானா வாரங்கல் மாவட்டத்தில் 200 கிலோ போதை பொருளுடன் கடத்திய லாரி பறிமுதல்.
* மஹாராஷ்ட்டிராவின் பல்கார் மாவட்டத்தில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் செயலாளராக பணியாற்றி பெண் 57 மர்ம முறையில் இறந்து கிடந்தார்.
தமிழக நிகழ்வு !
* ஈரோடு மாவட்டம் கருங்கல்பாளையம் அருகே திருச்செல்வியிடம் செயின் பறித்த மர்ம நபர்கள் செல்வியின் நாக்கை கத்தியால் அறுத்து விட்டு தப்பி ஒடினர்.
* உளுந்தூர்பேட்டையில் லாட்டரி விற்பதாக வந்த செந்தில்குமாரை கைது செய்ய முற்பட்டபோது போலீசாரை கம்பால் தாக்கி கொலை செய்ய முற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
*சென்னை விமான நிலையத்தில் ரூ.16.81 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், இது தொடர்பாக ஜாகிர் ஹூசைன் என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
*தாயை கொன்று மகன் தற்கொலை
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில், குடும்ப தகராறு காரணமாக, ஜேக்கப் என்பவர் தனது தாயாரை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு, வீட்டின் மாடியில் இருந்து தற்கொலை செய்து கொண்டார்.
உலக நடப்பு !
* அமெரிக்கா கலிபோர்னியாவில் கறுப்பின சிறுவர் மீது போன் திருடியதாக பொய்ப்புகார் அளித்த மியா என்ற பெண் கைது.

* பாகிஸ்தான் எல்லையான பஞ்சாப் மாநிலம் அட்டாரியில் ஊடுருவ முயன்ற 6பேர் பிடிக்கப்பட்டு பாக்., படையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
* யாழ்ப்பாணம் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூண் இடிக்கப்பட்டதற்கு கண்டித்து யாழ்., பல்கலை மாணவர்கள் போராட்டம்.
* நைஜீரியாவில் போக்கோ ஹாரம் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் குழந்தைகள் உள்பட 12 பேர் கொல்லப்பட்டனர். கடந்த 2009 லிருந்து இதுவரை பயங்கரவாத தாக்குதலில் 36 ஆயிரம் பேர் கொல்லப்பட்டதாக ஒரு புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE