இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் நள்ளிரவில் ஏற்பட்ட திடீர் மின் தடையால் பல முக்கிய நகரங்கள் இருளில் மூழ்கின. காலை வரை மின்சாரம் இல்லாததால் மக்கள் அவதிப்பட்டனர்.
பாகிஸ்தானில் நேற்று(ஜன.,09) நள்ளிரவு திடீரென மின்தடை ஏற்பட்டது. இதனால், இஸ்லாமாபாத், லாகூர், கராச்சி, பெஷாவர், முல்தான் உள்ளிட்ட பல முக்கிய நகரங்கள் இருளில் மூழ்கின.

மின்தடை தொடர்பாக அந்நாட்டு எரிசக்தி துறை அமைச்சர் ஒமர் ஆயுப் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், ‛‛ தேசிய மின் விநியோக அமைப்பின் அதிர்வெண்கள் ஐம்பதில் இருந்து திடீரென பூஜ்ஜியத்திற்கு சென்றதே மின்தடைக்கு காரணம். அதிர்வெண்கள் திடீரென சரிந்தது எதனால் என விசாரணை நடக்கிறது. மின் விநியோகத்தை வழங்குவதற்கான மாற்று வழிகளை மேற்கொண்டுள்ளோம். மக்கள் கொஞ்சம் பொறுமை காக்க வேண்டும்'' என தெரிவித்தார்.
காலை 4:00 மணிக்கு மேல், படிப்படியாக மின்சாரம் விநியோகம் செய்யப்பட்டது.

விடிய விடிய பாகிஸ்தானில், பல முக்கிய நகரங்கள் இருளில் மூழ்கியதால், பொது மக்கள் அவதிப்பட்டனர். இது குறித்து தங்களது கருத்துகளையும், அவதிகளையும் டுவிட்டரில் பதிவிட்டனர். இதனால், மின்தடை விவாதப்பொருளானது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE