சினிமாவில் எப்படியாவது பெரிய நடிகராகிவிட வேண்டும் என விடாமுயற்சியுடன் வாய்ப்புகளை வேட்டையாடும் இளைஞர்கள் இன்று இல்லாவிட்டாலும் என்றாவது ஒரு நாள் நினைத்த இடத்தில் சினிமாவில் தன்னை அடையாளம் காட்டி சாதித்து விடுகிறார்கள். சினிமா கனவுகளை நிஜமாக்க துடிக்கும் இளைஞர்களில் ஒருவராக இருக்கிறார் மதுரை கனிராஜ்.
''சின்ன வயதிலேயே சினிமாவில் நடிக்கும் ஆசை பிறந்தது. மதுரையில் 'கருப்பசாமி குத்தகைதாரர்' ஷூட்டிங் பார்க்க சென்ற போது நடிக்க வாய்ப்பு கொடுத்தனர். சைக்கிளில் வருவது போன்ற காட்சியில் நடித்தேன். பின் மதுரையில் எங்கெல்லாம் ஷூட்டிங் நடக்கிறதோ அங்கெல்லாம் செல்கிறேன். மதுரையில் குறும்படம் எடுக்க விரும்புபவர்களுக்கு கேமரா, ரிக்கார்டிங்,இசை உள்ளிட்ட உபகரணங்கள் பெற்று தருகிறேன்.மதுரையில் இயக்குனர்கள் சீனு ராமசாமி, சமுத்திரக்கனி வெளியிட்ட 'மிஸ்டர் நங்கை' குறும்படம், 'நாடோடிகள் 2'ல் வேலை பார்த்தேன். ஓரளவு சினிமா பணிகள் தெரிந்ததால் இயக்குனர் சரவணன் சக்தியின் 'பில்லா பாண்டி', இயக்குனர் முத்தையாவின் 'தேவராட்டம்' படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
இயக்குனர் மோகன் ராஜாவின் அசோசியேட் தாமரை செல்வன் ஷாம், ஆனந்தியை வைத்து ஒரு படம் இயக்குகிறார். மதுரையில் நடந்த ஆடிஷனில் தேர்வாகி முக்கிய கேரக்டரில் நடிக்கிறேன். இந்த படம், பார்வதி நாயர் நடிக்கும் 'ரூபம்' படத்தில் உதவி இயக்குனராக உள்ளேன். இயக்குனர் கனவும் இருப்பதால் மதுரையின் உண்மை சம்பவம் ஒன்றை கதையாக்கி பட்ஜெட் படமாக்க முயற்சித்து வருகிறேன்.நடிகர் சந்தானத்தின் ரசிகனான நான் சென்னையில் ரசிகர் மன்றம் ஆரம்பித்தேன். என் பிறந்த நாளுக்கு சென்னை அழைத்து மோதிரம் அணிவித்து வாழ்த்தினார். ஒரு முறை காரில் சென்ற போது நடந்து சென்ற என்னை அழைத்து உதவி வேண்டும் என்றால் கேளுங்கள் என்றார். இதுபோன்ற நல்ல மனிதர்கள், நண்பர்கள் துணையோடு என் சினிமா சாதனை பயணம் தொடர்கிறது, என்றார்.இவரை வாழ்த்த 97895 05554
ஸ்ரீனி
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE