பீஜிங்: தற்போது உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதிலிருந்து உலக நாடுகள் தங்களை தற்காத்துக்கொள்ள தீவிர முனைப்பில் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில் அமெரிக்காவின் சர்வதேச நிதி அமைப்பு ஒரு தகவலை வெளியிட்டுள்ளது. அதன்படி மற்ற நாடுகளை ஒப்பிடுகையில் சீனா கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து வேகமாக விடுபட்டு வருவதாகத் தெரிவித்துள்ளது. கடந்தாண்டு சீனா, கொரோனா தாக்கதிலிருந்து விடுபடும் சதவீதம் இரண்டாக இருந்த நிலையில் தற்போது 8 சதவீதத்துக்கு உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த தகவலை சர்வதேச நிதி அமைப்புத் தலைவர் எல்கே பர்கர் தெரிவித்துள்ளார். சீனா கொரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து விரைவில் விடுபட்டு வந்தாலும் சில பின்னடைவுகளைச் சந்தித்துவருகிறது என்று அவர் தெரிவித்துள்ளார்.

ஆசிய பசிபிக் துறைத்தலைவர் மற்றும் சீனாவின் சர்வதேச நிதி அமைப்பு தலைவர் எல்கே பர்கர் இதுகுறித்து கடந்த ஆண்டு ஆராய்ந்தார்.
சமீப காலங்களில் சீனா தனது அண்டை நாடுகளுடன் கடும்மோதல் போக்கில் ஈடுபட்டு வந்தது.
இதுகுறித்து சர்வதேச நிதி அமைப்புத் தலைவர் கூறுகையில் அண்டை நாடுகளைப் பகைத்துக்கொண்டு சீனா தனது வர்த்தகத்தை மேம்படுத்துவது சற்று சிரமம் என்று தெரிவித்துள்ளார்.
இந்த நிலை நீடித்தால் சிறு, குறு தொழில்கள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. சர்வதேச வர்த்தகத்தில் சீனாவின் பங்கு மிகவும் முக்கியமானது. ஆனால் கடந்த சில ஆண்டுகளை ஒப்பிடுகையில் 2020-ஆம் ஆண்டு அதன் பங்கு கணிசமாக குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.