சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அக்குபஞ்சர் சிகிச்சையில் பிரசவம்: கர்ப்பிணி பெண் சேயுடன் உயிரிழப்பு

Added : ஜன 10, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், பூலாம்பாடி பேரூராட்சியில் அழகம்மாள்(29). செவிலியர் பயிற்சி பெற்றவர். கர்ப்பணியான அவருக்கு, அவரது கணவர் விஜயவர்மன் அக்கு பஞ்சர் சிகிச்சை முறையில் நேற்று இரவு பிரசவம் பார்த்தார். அப்போது, குழந்தையை பாதியளவு பிரசவித்த அழகம்மாளுக்கு ரத்த போக்கு மற்றும் மூச்சு திணறல் ஏற்பட்டது. உயிருக்கு ஆபத்தான நிலையில் பெரம்பலூர்

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், பூலாம்பாடி பேரூராட்சியில் அழகம்மாள்(29). செவிலியர் பயிற்சி பெற்றவர். கர்ப்பணியான அவருக்கு, அவரது கணவர் விஜயவர்மன் அக்கு பஞ்சர் சிகிச்சை முறையில் நேற்று இரவு பிரசவம் பார்த்தார். அப்போது, குழந்தையை பாதியளவு பிரசவித்த அழகம்மாளுக்கு ரத்த போக்கு மற்றும் மூச்சு திணறல் ஏற்பட்டது. உயிருக்கு ஆபத்தான நிலையில் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதனையடுத்து அழகம்மாளுக்கு 5 பேர் கொண்ட மருத்துவக்குழுவினர் சிகிச்சையின் அளித்தனர். அதில், குழந்தையின் உடல் அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டது. தொடர்ந்து கவலைக்கிடமான அழகம்மாள் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால், பாதி வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
அவரது சடலம் உடற்கூறு ஆய்வுக்காக திருச்சி அரசு மருத்துவமனை பிணவறையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், உடற்கூறு ஆய்வு செய்யாமல் அழகம்மாளின் சடலத்தை தங்களிடம் ஒப்படைக்க கோரி திருச்சி அரசு மருத்துவமனையில் அவரது கணவர் விஜயவர்மன் உள்ளிட்ட குடும்பத்தார் போராட்டத்தில் ஈடுபட்டனர். விஜயவர்மனின் சகோதரர் விக்கிரமராஜா என்பவர் அக்குபஞ்சர் சிகிச்சை மேற்கொண்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
THINAKAREN KARAMANI - Vellore,இந்தியா
10-ஜன-202119:46:53 IST Report Abuse
THINAKAREN KARAMANI ஆயிரம் மருத்துவ வசதிகள் நாட்டிலிருந்தும் அந்தப் பெண்ணுக்கு இப்படி ஒரு நிலைமையா? THINAKAREN KARAMANI, VELLORE, INDIA.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X