புதுடில்லி:''கர்நாடக அமைச்சரவையை விரிவாக்கம் செய்ய, பா.ஜ., தலைமை, விரைவில் அனுமதி வழங்கும்,'' என, முதல்வர் எடியூரப்பா நம்பிக்கை தெரிவித்தார்.
![]()
|
கர்நாடகாவில், முதல்வர் எடியூரப்பா தலைமையில், பா.ஜ., ஆட்சி அமைந்துள்ளது. கர்நாடகா அரசில், முதல்வர் உட்பட, 34 பேர், அமைச்சரவையில் இடம் பெற்றிருக்கலாம். தற்போது, அமைச்சரவையின் பலம், 27 ஆக உள்ளது.மாநில அமைச்சரவையை விரிவுப்படுத்த, முதல்வர் எடியூரப்பா, கடந்த ஓராண்டாகவே திட்டமிட்டு வருகிறார். அமைச்சர் பதவிகளுக்கான போட்டி, கர்நாடகா மாநில, பா.ஜ., வினரிடம் அதிகம் உள்ளது. இதனால், அமைச்சரவை விரிவாக்கத்துக்கு, பா.ஜ., தலைமை ஒப்புதல் அளிக்காமல், காலம் தாழ்த்தி வருகிறது.
![]()
|
இந்நிலையில், நேற்று டில்லிக்கு வந்த கர்நாடக முதல்வர் எடியூரப்பா, பா.ஜ., தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை சந்தித்து பேசினார். பின், நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
கர்நாடக அமைச்சரவையை விரிவுப்படுத்துவது பற்றி, நட்டா மற்றும் அமித் ஷாவிடம் விரிவாக ஆலோசனை நடத்தினேன். அமைச்சரவை விரிவாக்கத்துக்கு, பா.ஜ., தலைமை விரைவில் ஒப்புதல் அளிக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.அமைச்சர்களாக பதவியேற்போரின் பெயர்கள், விரைவில் முடிவு செய்யப்பட்டு அறிவிக்கப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement