பொது செய்தி

இந்தியா

33 ஆயிரம் டன் கோவிட் கழிவு சேகரிப்பு : மாசுகட்டுப்பாட்டு வாரியம்

Updated : ஜன 10, 2021 | Added : ஜன 10, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
புதுடில்லி: கடந்த 7 மாதங்களில் நாடு முழுவதிலும் இருந்து 33 ஆயிரம் டன் அளவிற்கு கொரோனா தொற்று கழிவுகள் சேகரிக்கப்பட்டு உள்ளதாக மாசுகட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்து உள்ளது. இது குறித்து கூறப்படுவதாவது: கடந்த 2019ம் ஆண்டு இறுதியில் உலகம் முழுவதும் கொரோனா தொற்று பரவ துவங்கியது. இந்தியாவில் கடந்த 2020ம் ஆண்டு மார்ச் மாதம் இறுதியில் இருந்து பல்வேறு மாநிலங்கள் லாக்டவுனை

புதுடில்லி: கடந்த 7 மாதங்களில் நாடு முழுவதிலும் இருந்து 33 ஆயிரம் டன் அளவிற்கு கொரோனா தொற்று கழிவுகள் சேகரிக்கப்பட்டு உள்ளதாக மாசுகட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்து உள்ளது.latest tamil newsஇது குறித்து கூறப்படுவதாவது: கடந்த 2019ம் ஆண்டு இறுதியில் உலகம் முழுவதும் கொரோனா தொற்று பரவ துவங்கியது. இந்தியாவில் கடந்த 2020ம் ஆண்டு மார்ச் மாதம் இறுதியில் இருந்து பல்வேறு மாநிலங்கள் லாக்டவுனை பிறப்பித்தன. தொடர்ந்து மத்திய மாநில அரசுகள் முககவசம் அணியவும் கைகளை சானிடைசர் கொண்டு சுத்தப்படுத்தவும் வலியுறுத்தி வந்தன. மேலும் பல்வேறு மக்களிடம் கொரோனா மாதிரி பரிசோதனைகள் நடத்தப்பட்டன.

இந்த வகையில் கொரோனா தொற்று மருத்துவகழிவுகளாக நாடு முழுவதும் இருந்து சுமார் 33 ஆயிரம் டன் அளவிற்கு சேகரமாகி உள்ளது என மாசுகட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. இது குறித்து அவை கூறி இருப்பதாவது: பயோ மெடிக்கல் கழிவுகளாக கையுறைகள், முககவசங்கள் பிபிஇ கிட்டுகள் ஷூ கவர்கள் ஊசிகள், ரத்த பைகள் உள்ளிட்டையாகும்.

கடந்த ஜூன் முதல் டிசம்பர் மாத வரையிலான ஏழு மாதகால கட்டங்களில் அதிக கழிவுகளை கொண்ட மாநிலமாக முகாராஷ்டிரா 5,367 டன் அளவிற்கு கழிவுகளை ஏற்படுத்தி முதல் இடத்தை பிடித்துள்ளது. அதற்கு அடுத்த இடத்தல் கேரளா 3,300 டன், குஜராத் 3,086 டன், தமிழ்நாடு 2,806 டன், உ.பி., 2,502 டன், டில்லி 2,471 டன், மே.வங்கம் 2,095 டன், கர்நாடகா 2,026 டன் அளவிற்கு கழிவுகளை ஏற்படுத்தி உள்ளது.


latest tamil newsமாதங்கள் வாரியாக செப்.,-ல் நாடுமுழுவதும் 5,490 டன் கழிவுகள், அக்.,-ல் 5,597 டன், நவ., 4,864 டன் டிச., 4,530 டன் அளவிற்கு கழிவுகள் சேகரிப்பு செய்யப்பட்டுள்ளது என மாசுகட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தல புராணம் - மதுரை,இந்தியா
11-ஜன-202102:45:27 IST Report Abuse
தல புராணம் என்ன அமைச்சர் கருப்பண்ணரே, எல்லாத்தையும் ஏரியில் கொட்டிட வேண்டியது தானே ??
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X