பொது செய்தி

தமிழ்நாடு

ரூ. 125 கோடி! மதுராந்தகம் ஏரியை துார் வார நிதி ஒதுக்கீடு ...விரைவில் பணிகள் துவங்கப்படும்

Updated : ஜன 11, 2021 | Added : ஜன 10, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
மதுராந்தகம் : மதுராந்தகம் ஏரியை துார் வாரி சீரமைக்க, 125 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக, செங்கல்பட்டு கலெக்டர் தெரிவித்தார். செங்கல்பட்டு மாவட்டத்தில், பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள ஏரிகளில், மதுராந்தகம் ஏரி பெரியது. இது, 23.3 அடி ஆழம், 2,411 ஏக்கர் நீர்ப்பிடிப்பை உடையது. 2,853 ஏக்கரில் விவசாயம் செய்யப்படுகிறது.இந்த ஆண்டு, நவம்பர் மாதம், ஏரி முழுமையாக
 ரூ. 125 கோடி! மதுராந்தகம் ஏரியை துார் வார நிதி ஒதுக்கீடு ...விரைவில் பணிகள் துவங்கப்படும்

மதுராந்தகம் : மதுராந்தகம் ஏரியை துார் வாரி சீரமைக்க, 125 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக, செங்கல்பட்டு கலெக்டர் தெரிவித்தார்.

செங்கல்பட்டு மாவட்டத்தில், பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள ஏரிகளில், மதுராந்தகம் ஏரி பெரியது. இது, 23.3 அடி ஆழம், 2,411 ஏக்கர் நீர்ப்பிடிப்பை உடையது. 2,853 ஏக்கரில் விவசாயம் செய்யப்படுகிறது.இந்த ஆண்டு, நவம்பர் மாதம், ஏரி முழுமையாக நிரம்பி, உபரி நீர் வெளியேறியது. சமீபத்தில் பெய்த மழைக்கு, இரண்டாவது முறையாக, உபரி நீர் வெளியேறுகிறது.இந்நிலையில், மாவட்ட கலெக்டர் ஜான் லுாயிஸ், மதுராந்தகம் ஏரியை, நேற்று முன்தினம் பார்வையிட்டார்.

அப்போது, அவர் கூறியதாவது:செங்கல்பட்டு மாவட்டத்தில், மொத்தமுள்ள, 528 ஏரிகளில், 495 ஏரிகள், முழுமையாக நிரம்பி உள்ளன.மதுராந்தகம் ஏரி, முழு கொள்ளளவை எட்டி, மீண்டும் இரண்டாவது முறையாக, உபரி நீர் வெளியேறுகிறது.இந்த ஏரியை துார் வார வேண்டும் என, சுற்றுவட்டார கிராம விவசாயிகள், நீண்டகாலமாக வலியுறுத்தி வருகின்றனர். அக்கோரிக்கையை ஏற்று, மதுராந்தகம் ஏரியை துார் வாரி, கரையை பலப்படுத்த, 125 கோடி ரூபாயை, அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.இதேபோல், செங்கல்பட்டு கொளவாய் ஏரியை துார் வாரவும், 60 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான பணிகள், விரைவில் துவங்கும்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
John Miller - Hamilton,பெர்முடா
11-ஜன-202123:10:06 IST Report Abuse
John Miller ஏன்டா நீ என்ன படிச்சா முட்டாளா? தூர் வருவதற்காக நிறைந்த ஏரியை காலி செய்வார்களா? சோறுதான் சாப்பிடுகிறாயா?
Rate this:
Cancel
R.RAMACHANDRAN - Sundivakkam,இந்தியா
11-ஜன-202109:59:52 IST Report Abuse
R.RAMACHANDRAN ஏரிகள் தூர் வருவதாக அரசு பணம் கொள்ளை போகிறது.ஏரிகள் தூர் வாராமல் ஏரிகளில் குழி தோண்டி கரைகள் மீது கொட்டிவிட்டு அதனை சமன் செய்யாமலே பணத்தை பெற்று அதிகார வர்க்கத்துடன் பகிர்ந்து கொள்கின்றனர்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X