மதுராந்தகம் : வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம், ஒன்பது மாதங்களுக்கு பின், நேற்று திறக்கப்பட்டது.
தமிழகத்தில், பறவைகள் சரணாலயமான வேடந்தாங்கல் ஏரியில், ஆண்டுதோறும், நவம்பர் மாத துவக்கத்தில், வெளிநாடுகளில் இருந்து, பல வகையான பறவைகள் வந்து தங்கும். இங்கு தங்கி, இனப்பெருக்கம் செய்யும் அப்பறவைகள், மே, ஜூன் மாதங்களில் திரும்ப சென்று விடும்.இந்தாண்டு பருவமழைக்கு, கடந்த மாதம், ஏரி முழுமையாக நிரம்பியதை அடுத்து, வெளிநாட்டு பறவைகளின் வரத்து அதிகரித்தது.எனினும், ஊரடங்கு காரணமாக, சரணாலயம் திறக்கப்படாமல், ஒன்பது மாதங்களாக மூடியே வைக்கப்பட்டிருந்தது.
பறவைகளை காண முடியாமல், ஏமாற்றமடைந்த சுற்றுலா பயணியர், சரணாலயத்தை திறக்க கோரி, பல தரப்பினரும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.இந்நிலையில், தமிழக அரசின் வழிகாட்டு நெறிமுறைகளோடு, ஒன்பது மாதங்களுக்கு பின், பறவைகள் சரணாலயம், வனச்சரக அலுவலர் சுப்பையா மற்றும் வனவர் பொன்ரங்கம் ஆகியோர் தலைமையில், நேற்று திறக்கப்பட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE