பொது செய்தி

தமிழ்நாடு

பொங்கலுக்கு மீனவ பகுதிகளில்

Added : ஜன 10, 2021
Share
Advertisement
பொன்னேரி : பண்டைய காலங்களில், வீடுகளில் மண் பானையில் குடிநீர் இருக்கும். மண் பானையில் சமையல் நடக்கும். காலப்போக்கில் இவை கிராமப் புறங்களில் கூட காணாமல் போய்விட்டது. அதே சமயம், பொங்கல் தினத்தில் இவற்றை யாரும் மறந்து விடுவதில்லை.சூரியன் மற்றும் விவசாயத்திற்கு, கால்நடைகளுக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில், தைத்திருநாளில் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. அனைத்து

பொன்னேரி : பண்டைய காலங்களில், வீடுகளில் மண் பானையில் குடிநீர் இருக்கும். மண் பானையில் சமையல் நடக்கும். காலப்போக்கில் இவை கிராமப் புறங்களில் கூட காணாமல் போய்விட்டது.

அதே சமயம், பொங்கல் தினத்தில் இவற்றை யாரும் மறந்து விடுவதில்லை.சூரியன் மற்றும் விவசாயத்திற்கு, கால்நடைகளுக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில், தைத்திருநாளில் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. அனைத்து தரப்பு மக்களும் கொண்டாடும் திருநாளாக இது உள்ளது.தமிழர்களின் முக்கிய பண்டிகையாக கொண்டாடப்படும் பொங்கல் திருநாளில், மண் பானை, கரும்பு, மஞ்சள் ஆகியவை முக்கிய இடம் பெறுகின்றன. நகரங்களை விட, கிராமங்களில் பொங்கல் வெகு விமரிசையாக நடைபெறுகிறது.பொங்கல் பண்டிகையின் மிக முக்கிய பங்கு வகிப்பது மண்பானை. மண் பானையில் பொங்கல் வைத்து, சூரியனை வழிபடுவர்.

பொங்கல் திருநாளை ஒட்டி, திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு உடையார் தெருவில், பொங்கல் பானைகள் தயாரிக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. பழவேற்காடு பகுதி முழுதும் உவர்ப்பு மண் மற்றும் கடல் மணல் தான் கிடைக்கும் நிலையில், வெளியிடங்களில் இருந்து, 8,000 - 10 ஆயிரம் ரூபாய் வரை விலை கொடுத்து களிமண் வாங்கி வருகின்றனர்,களிமண்ளை நன்கு பதப்படுத்தி, அதில் பானை, சட்டி, அகல்விளக்கு, பொம்மைகள், பூந்தொட்டி, குடுவை, அடுப்பு, கல்சட்டி, உண்டியல், என, பலவற்றை தயாரிக்கின்றனர். ஒரே தெருவில், 10 குடும்பங்கள் இத்தொழிலில் ஈடுபட்டு உள்ளன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X