கும்மிடிப்பூண்டி : கும்மிடிப்பூண்டி, பஜார் பகுதியில், மீன் மார்க்கெட் என அழைக்கப்படும், நாள் அங்காடி கட்டடம் ஒன்று உள்ளது.
பேரூராட்சி பராமரிப்பில் உள்ள அந்த கட்டடம், 30 ஆண்டுகள் பழமையானது.கட்டட முகப்பில், நான்கு கடைகள், உட்புறத்தில், 30 சிறு கடைகள், முதல் தளத்தில், தபால் நிலையம் இயங்கி வருகின்றன. அந்த, 30 சிறு கடைகளில், 20ல் மீன் கடைகள் இயங்கி வருகின்றன. அனைத்து கடைகளுக்கும், பேரூராட்சி நிர்வாகம் சார்பில், ஆண்டு வாடகை வசூலிக்கப்பட்டு வருகிறது. கட்டடத்தின் பெரும் பகுதி சேதம் அடைந்து, எந்த நேரத்திலும் இடிந்து விழக்கூடிய ஆபத்தான நிலையில் இயங்கி வருகிறது.
ஐந்து ஆண்டு காலமாக, கட்டடத்தின் மேற்பரப்பு சிமென்ட் காரை பெயர்ந்து, மீன் வியாபாரிகள் மீதும், அங்கு வரும் பொதுமக்கள் மீதும் விழுவது, வாடிக்கையாகி போனது. பராமரிக்க முடியாத நிலையில், அந்த கட்டடம் இருப்பதால், அங்கு சுகாதாரமற்ற சூழல் நிலவுகிறது.புதிய கட்டடம் நிறுவ வேண்டும் என, மீன் வியாபாரிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். நிலைமையின் விபரீதத்தை உணர்ந்து, மேலும், தாமதிக்காமல், உடனடியாக பேரூராட்சி நிர்வாகம் அந்த கட்டடத்தை இடித்து புதிய கட்டடம் நிறுவ வேண்டும் என, மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE