ரூ.5 லட்சத்தில் குடிநீர் 'பைப் லைன்'செவ்வாப்பேட்டை: செவ்வாப்பேட்டை ஊராட்சிக்குட்பட்ட மகாலட்சுமி நகர் பகுதியில், 20 ஆண்டுகளாக, குடிநீர் பைப் லைன் இல்லாமல் அவதிப்பட்டு வந்தனர். இதையடுத்து, பலமுறை ஊராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில், தற்போது, ஊராட்சி மன்ற தலைவி டெய்சிராணி வலியுறுத்தலின்படி, கவுன்சிலர் இந்திரா தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து, 5 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்து, புதிய குடிநீர் பைப்லைன் அமைக்கும் பணி, சில தினங்களுக்கு முன் துவங்கி, தற்போது நிறைவடைந்துள்ளது.
கிராம விழிப்புணர்வு காவலர் பணிகடம்பத்துார்: கடம்பத்துார் ஒன்றியம், பிஞ்சிவாக்கம் ஊராட்சியில் நடந்த கிராம விழிப்புணர்வு காவலர் அறிமுக நிகழ்ச்சிக்கு, காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் சீனிவாசன் முன்னிலை வகிக்க, ஆய்வாளர் ரஜினிகாந்த் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் உமா ஆகியோர் தலைமை வகித்தனர்.சிறப்பு அழைப்பாளராக டி.எஸ்.பி., துரைபாண்டியன் பங்கேற்று, கிராம விழிப்புணர்வு காவலர் பணியை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார்.ஊராட்சி பகுதியில், சிறு அடிதடி, திருட்டு போன்ற சிறு சிறு பிரச்னைகளை கிராம விழிப்புணர்வு காவலர் மூலம், காவல் துறைக்கு தெரியப்படுத்தினால், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.இதேபோல், புதுமாவிலங்கை ஊராட்சியிலும், கிராம விழிப்புணர்வு காவலர் அறிமுக நிகழ்ச்சி நடந்தது.
ஊர்க்காவல் படையினருக்கு பாராட்டு விழா
மதுராந்தகம்: கொரோனா முழு ஊரடங்கின்போது, மதுராந்தகம் வட்டார பிரதான சாலைகள், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில், மதுராந்தகம் அலகு ஊர்க்காவல் படையைச் சேர்ந்த, 96 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.சிறப்பாக பணிபுரிந்த இப்படை வீரர்களுக்கான பாராட்டு விழா, மதுராந்தகத்தில் நேற்று நடந்தது. அவர்களை, காஞ்சிபுரம் மண்டல ஊர்க்காவல் படை தளபதி ராஜா பாராட்டினார். அவர்களுக்கு, அரிசி, பருப்பு உள்ளிட்ட மளிகை பொருட்களை வழங்கி, வாழ்த்து தெரிவித்தார்.
காஞ்சி சிவனடியார் திருக்கூட்டம்
காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில், 1971ம் ஆண்டு முதல், ஆன்மிகம் மற்றும் சைவ சமய பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வரும், காஞ்சி சிவனடியார் திருக்கூட்டத்தின், 49வது ஆண்டு நிறைவு விழா, காஞ்சிபுரத்தில், இரு நாட்கள் நடந்தது.நேற்று முன்தினம் மாலை இறை வழிபாட்டுடன் துவங்கிய விழாவில், சமய கருத்தரங்கம், சொற்பொழிவு, திருமுறை விண்ணப்பம் நடந்தது. நிறைவு நாளான நேற்று காலை, சிவபூஜை, இடப கொடியேற்றுதல், ஆண்டு விழா மலர் வெளியிடப்பட்டு, ஓதுவா மூர்த்திகளுக்கு பொற்கிழி வழங்கப்பட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE