பொது செய்தி

தமிழ்நாடு

விஜய் சிவாவின் கேதாரம் அபாரம்

Updated : ஜன 11, 2021 | Added : ஜன 10, 2021
Share
Advertisement
பொதுவாக, கர்நாடக இசை என்றாலே, 'நமக்கு வேண்டாம் இந்த வம்பு' என, ஒதுங்கிச் செல்பவர்களை, இசையின் பக்கம் திசை திருப்பவும், அதில் மூழ்கித் திளைக்கும் ஆர்வலர்களின் ரசிகத் தன்மையை மேம்படுத்தவும், 1985ல் ஒய்.ஏ.சி.எம்., எனப்படும், 'யூத் அசோஸியேஷன் பார் கிளாசிகல் மியூசிக்' ஏற்படுத்தப்பட்டது; இதன் நிறுவனர் விஜய் சிவா. இது தவிர, ஒவ்வொரு பள்ளியாகச் சென்று, 'பில்ட் எ ரசிகா' என்ற

பொதுவாக, கர்நாடக இசை என்றாலே, 'நமக்கு வேண்டாம் இந்த வம்பு' என, ஒதுங்கிச் செல்பவர்களை, இசையின் பக்கம் திசை திருப்பவும், அதில் மூழ்கித் திளைக்கும் ஆர்வலர்களின் ரசிகத் தன்மையை மேம்படுத்தவும், 1985ல் ஒய்.ஏ.சி.எம்., எனப்படும், 'யூத் அசோஸியேஷன் பார் கிளாசிகல் மியூசிக்' ஏற்படுத்தப்பட்டது; இதன் நிறுவனர் விஜய் சிவா.

இது தவிர, ஒவ்வொரு பள்ளியாகச் சென்று, 'பில்ட் எ ரசிகா' என்ற பெயரில், ஒரு ரசிகனை உருவாக்குதல், 'காட்ச் தெம் யங்' என்பதாக, இளம் வயதிலேயே அவர்களின் மனதில் இசை குறித்த ஓர் தாக்கத்தை ஏற்படுத்துவது என்ற குறிக்கோளுடன் பணியாற்றியவரும் இவரே.'பெடரேஷன் ஆப் சிட்டி சபாஸ்' சார்பில் நடந்த, விஜய் சிவாவின் கச்சேரியின் முக்கிய அம்சம் என்ன? மூன்று முதல் தர ஆலாபனைகள் வழங்கிய ராகங்கள் - சுத்த தன்யாசி, கேதாரம், சாவேரி. இதில் கேதாரம் அவ்வளவாகப் பிடி கொடுக்காத ஒன்று. வழக்கமாக எவரும் கையாள எடுத்துக் கொள்ளாதது. பாடல்களில் தான் இவற்றின் ராக ஊற்று இருக்கும். அதுவும்,'ஆனந்த நடனப் பிரகாசம்' ஒரு முத்திரைப் பாடல். ராகத்திற்கு உகந்த ரஞ்சகத்துவம், அந்தரத்திலிருந்து பிடித்து வந்தது போலிருந்த, 'க'விலிருந்து 'ஸ' விற்கு வந்த ஜாரு கமகங்கள், ராகச்சாய ஸ்வரங்களுக்குரிய அவகாசம், இவற்றின் மீதெல்லாம் ஆதாரப்பட்டு வந்தது ஆலாபனை. பாடலைப் பாடிய போது, ஒவ்வொரு வரியையும் அனுபவித்துப் பாடினார்.

இதற்கு முன்னர் வந்த, சுத்ததன்யாசிக்கும் நீண்டதொறு ஆலாபனையைக் கொடுத்துள்ளது, இவரை எந்தவிதத்திலும் கட்டுப்படுத்தியதாகத் தெரியவில்லை. கலைஞன் மனம் போன போக்கில் செல்வது இயல்பன்றோ? இதே முறையில் சாவேரி ஆலாபனையும் ஒரு தன்னிறைவைக் கொடுத்தது.ஆர்.கே.ஸ்ரீராம்குமாரின் வயலின், ராக ஆலாபனைகளில் சிவாவிற்கு நிகரான, ஸ்வானுபவத்தை தானும் பெற்றுள்ளதை மெய்ப்பிக்கும் வண்ணமும், நெரவல், கற்பனை ஸ்வரங்களில் விஜய் சிவாவின் திறமைக்கு ஒப்ப இவரது நுட்பமும் திறனும் இருக்கிறது என்பதையும் தெளிவாக்கியது. நெரவல்கள் கேதாரத்தில், 'சங்கீத வாத்ய விநோத தாண்டவ' சாவேரியில் 'பதஸரோஜ' எனுமிடத்திலும் வந்தன.சீதாலட்சுமியும், சுவேதா ராமச்சந்திரனும் பின் பாட்டு. இவர்களுக்கு வாய்ப்பளித்து ஊக்குவித்தார் விஜய் சிவா.கல்யாணிப் பாடலும் கடைசியில் வந்த, மூன்று - நான்கு பாடல்களும் துக்கடாக்களா? இவரென்ன சிவனடியாரோ என்றே நம்மை எண்ண வைத்தது. கல்யாணியில், 'கண்டேன் கலி தீர்ந்தேன்' அடுத்து 'வேயுறு தோளி பங்கன்' என்ற கோளறு திருப்பதிகம்.இதற்கடுத்து ஏற்கெனவே ஆளை உருக்கும் 'வருகலாமோ' விற்கு முன்னுரை போல வந்த நடராஜ பத்திலிருந்து, 'இன்னமும் சொல்லவோ உன் மனம் கல்லோ.' வைத்யநாதன் மிருதங்கத்திலும், 'கடம்' கார்த்திக்கும் வாசித்ததில், ஒன்றை கவனித்தோம்; போட்டி என்பதே இல்லை.இருவரும் லய பலத்தையும், அனுபவ பலத்தையும் சமமாகப் பெற்று விளங்குபவர்கள். அவர்களின் வாசிப்பும் அதையே வெளிப்படுத்தியது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X