சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ரூ.100 கோடிக்கு ரூ.200 கோடி: சீன கும்பல் வேட்டை

Added : ஜன 10, 2021
Share
Advertisement
சென்னை : 'சீனாவில் இருந்து, 100 கோடி ரூபாய் தரப்பட்டால், அவற்றை ஒரு மாதத்திற்குள், 200 கோடி ரூபாயாக அனுப்பி வைக்க வேண்டும். கும்பலின் தலைவன் ஹாங் உத்தரவுப்படி, கந்து வட்டி வசூலில் ஈடுபட்டோம்' என, லோன் செயலி மோசடி கும்பலை சேர்ந்தவர்கள், போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளனர்.லோன் செயலி வழியாக கந்துவட்டி வசூலித்து வந்த, சீனாவை சேர்ந்த ஜியா யாமோ, 38, ஊ யான்லுன், 28; பெங்களூரை

சென்னை : 'சீனாவில் இருந்து, 100 கோடி ரூபாய் தரப்பட்டால், அவற்றை ஒரு மாதத்திற்குள், 200 கோடி ரூபாயாக அனுப்பி வைக்க வேண்டும்.

கும்பலின் தலைவன் ஹாங் உத்தரவுப்படி, கந்து வட்டி வசூலில் ஈடுபட்டோம்' என, லோன் செயலி மோசடி கும்பலை சேர்ந்தவர்கள், போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளனர்.லோன் செயலி வழியாக கந்துவட்டி வசூலித்து வந்த, சீனாவை சேர்ந்த ஜியா யாமோ, 38, ஊ யான்லுன், 28; பெங்களூரை சேர்ந்த பிரமோதா, 28, பவன், 27, ஆகியோரை, இம்மாதம், 2ம் தேதி, சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார், பெங்களூரில் கைது செய்தனர்.விசாரணையில், இவர்களின் பின்னணியில் மிகப்பெரிய மோசடி கும்பல் செயல்படுவது தெரியவந்தது.

போலி ஆவனம்அதன்பின், இந்த மோசடி கும்பலுக்கு, போலி ஆவணங்கள் வாயிலாக, 1,100 சிம்கார்டுகள் வாங்கி கொடுத்த, சென்னை குரோம்பேட்டையைச் சேர்ந்த முத்துகுமார் உட்பட, நான்கு பேரை கைது செய்தனர். இவர்களில், முதலில் கைது செய்யப்பட்ட ஜியா யாமோ, ஊ யான்லுன் உள்ளிட்ட நான்கு பேரை, ஆறு நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்போலீசாரிடம், ஜியா யாமோ அளித்துள்ள வாக்குமூலம்:எங்கள் மோசடி கும்பலை சேர்ந்த, ஹாங் என்பவர் சீனாவில் உள்ளார். இவருக்கு செயலர் உட்பட பலர் உள்ளனர். ஹாங் தலைமையிலான குழுவினர் தான், எங்களுக்கு கந்து வட்டி வசூலிப்பதற்கென்று செயலிகளை வடிவமைத்து கொடுப்பர்.

இந்தியாவில், நாங்கள் எப்படி செயல்பட வேண்டும். இங்குள்ள நபர்களை கூட்டாளியாக மாற்றுவது எப்படி என்பது குறித்து, பிரத்யேக செயலி வழியாக, ஹாங் உத்தரவு பிறப்பிப்பார். கதந்துவட்டிஅவரது உத்தரவின்படி, பெங்களூரில், 110 பேருடன் போலி கால் சென்டர் நடத்தி வந்தோம். இதற்கு, பிரமோதா, பவன், சென்னையைச் சேர்ந்த முத்துகுமார் உள்ளிட்டோர் உடந்தையாக இருந்தனர்.எங்களுடன் ரியா குப்தா என்ற பெண்ணும் செயல்பட்டு வந்தார். எங்கள் கால் சென்டரில், வேலை பார்க்கும் ஒவ்வொரு ஊழியரும், செயலி வழியாக தினமும், 10 பேரிடமாவது கந்து வட்டி வசூலிக்க வேண்டும்.

இல்லையேல், வாரந்தோறும் சனிக்கிழமை வேலையை விட்டு நீக்கி விடுவோம். சீனாவில் இருந்து, 100 கோடி ரூபாய் தரப்பட்டால், அவற்றை ஒரு மாதத்திற்குள், 200 கோடி ரூபாயாக திரும்ப அனுப்ப வேண்டும். அத்துடன், கால் சென்டர் வாடகை, ஊழியர்கள் சம்பளம், இதர செலவுகள் அனைத்தும் எங்களை சேர்ந்தது.இவ்வாறு, அவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர். முக்கிய புள்ளிகள்சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் சிக்கியுள்ள, சீன மோசடி கும்பல், எப்படி இந்தியாவில் இருந்து அவர்களது நாட்டிற்கு சட்ட விரோதமாக பணம் அனுப்பியது; இதன் பின்னணியில் உள்ள முக்கிய புள்ளிகள் குறித்து, அமலாக்க துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X