திருவான்மியூர், : திருவான்மியூரில், தரையில் கிடந்த, விலையுயர்ந்த மொபைல் போனை, உரியவரிடம் ஒப்படைத்த பூ வியாபாரியை, போலீசார் மனதார பாராட்டினர்.
பெசன்ட் நகர், ஊரூர்குப்பத்தைச் சேர்ந்தவர் சசிகுமார், 34; பூ வியாபாரி. நேற்று முன்தினம், திருவான்மியூர், தெற்குமாட வீதியில் செல்லும்போது, தரையில் ஒரு மொபைல் போன் கிடந்தது. போனை எடுத்த சசிகுமார், திருவான்மியூர் போலீசில் ஒப்படைத்தார்.காவல் உதவி ஆய்வாளர் ராஜகோபால் விசாரணையில், 70 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான, 'ஆப்பிள்' நிறுவன மொபைல் போன் என தெரிந்தது.சிறிது நேரத்தில், உரிமையாளர் போனில் தொடர்பு கொண்டார். திருவான்மியூர், கடற்கரை சாலையைச் சேர்ந்த ஸ்ரீதர், 54, என்பவரின் மொபைல் போன் என தெரிந்தது.
காவல் நிலையம் சென்ற ஸ்ரீதரிடம், போலீசார், போன் குறித்து உரிய விசாரணை நடத்தினர். பின், போலீசார் முன்னிலையில், போனை சசிகுமார், ஸ்ரீதரிடம் ஒப்படைத்தார்.தன்னலம் கருதாமல், விலை உயர்ந்த போனை, காவல் நிலையம் வழியாக, உரியவரிடம் ஒப்படைத்த சசிகுமாரை, போலீசார் மனதார பாராட்டினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE