தி.நகர் : தி.நகரில் உள்ள தேசிய ஊடகவியலாளர் நலச்சங்கத்தின் சார்பில், பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
தேசிய ஊடகவியலாளர் நலச்சங்கத்தின் சார்பில், தி.நகரில் உள்ள சங்க அலுவலகத்தில், நேற்று காலை, சமநோக்கு தைப் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.இதில், 'கலைமாமணி' விருது பெற்ற திருநங்கை சுதா மற்றும் இயன்முறை மருத்துவர் திருநங்கை செல்வி சந்தோஷம் ஆகியோர், சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.இது குறித்து, தேசிய ஊடகவியலாளர் நலச்சங்க நிறுவன பொதுச் செயலர் ஜெயகிருஷ்ணன் கூறியதாவது:தேசியத்தையும், தெய்வீகத்தையும் வளர்க்க வேண்டும் என, இச்சங்கம் துவங்கப்பட்டது.
எங்கள் சங்கம் வாயிலாக, கல்லுாரி மாணவர்களுக்கு ஊடகத்துறை குறித்து பயிற்சி அளிக்கப்படுகிறது.இந்த சமூகத்தில் மூன்றாம் பாலினத்தவர்களை ஒதுக்காமல், அவர்களையும் சமமாக பார்க்க வேண்டும் என்ற நோக்குடன், சமநோக்கு பொங்கல் விழா கொண்டாடப் படுகிறது. இவ்வாறு, அவர் கூறினார்.இது குறித்து மருத்துவர் திருநங்கை செல்வி சந்தோஷம் கூறியதாவது:நான் இயன்முறை மருத்துவராக ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் பணிபுரிகிறேன்.கல்வியை நாம் முறையாக கையாண்டால், நமக்கான சிறந்த எதிர்காலம் உள்ளது என்ற கருத்தை, என்னை போன்றவர்களுக்கு சொல்ல விரும்புகிறேன்.
நாம் மற்றவர்களிடம் அன்பாகவும், சுய ஒழுக்கத்துடனும் இருந்தால், வாழ்க்கையில் வெற்றி பெற முடியும்.ஒரு மனிதன் மனிதனாக மாற, நம் கலாசாரத்தில் நிறைய விஷயங்கள் உள்ளன. பொங்கல் விழா என்பது, அனைவரும் ஒற்றுமையா, அன்பா, மகிழ்ச்சியாக இருப்பது.இந்த அன்பும், மகிழ்ச்சியும் எல்லாரிடத்திலும், எப்போதும் இருக்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE