தமிழர்களுக்கு விருது

Updated : ஜன 12, 2021 | Added : ஜன 10, 2021 | கருத்துகள் (4)
Share
Advertisement
பத்மஸ்ரீ, பத்மபூஷன் போன்ற விருது பெற்றவர்களின் பட்டியல், குடியரசு தினத்திற்கு முன் தினம் அறிவிக்கப்படும். இந்த விருதுகள் பெற, பலரும் போட்டி போட்டு, டில்லியில், 'லாபி' செய்வர். ஆனால், இப்போது நிலைமை மாறிவிட்டது.மோடி பிரதமரான பின், இந்த விருதுகள் பெறுவதற்கான விதிமுறைகள் மாற்றப்பட்டு விட்டன. வெறும் சிபாரிசு மட்டும் வைத்து, ஒருவர் இந்த விருதைப் பெற முடியாது.வரும், 25ம்
பத்மஸ்ரீ, பத்மபூஷன், விருது, மத்திய அரசு, பிரதமர் மோடி, தமிழகம், திருச்சி, திருநெல்வேலி, தஞ்சாவூர்

பத்மஸ்ரீ, பத்மபூஷன் போன்ற விருது பெற்றவர்களின் பட்டியல், குடியரசு தினத்திற்கு முன் தினம் அறிவிக்கப்படும். இந்த விருதுகள் பெற, பலரும் போட்டி போட்டு, டில்லியில், 'லாபி' செய்வர். ஆனால், இப்போது நிலைமை மாறிவிட்டது.

மோடி பிரதமரான பின், இந்த விருதுகள் பெறுவதற்கான விதிமுறைகள் மாற்றப்பட்டு விட்டன. வெறும் சிபாரிசு மட்டும் வைத்து, ஒருவர் இந்த விருதைப் பெற முடியாது.வரும், 25ம் தேதி அறிவிக்கப்பட உள்ள பத்ம விருதுகளில், பல ஆச்சர்யங்கள் இருக்கும் என்கின்றனர் அதிகாரிகள். தமிழகத்திலிருந்து பலர், இந்த விருதுகளுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

மேல் தட்டு மக்களுக்கு மட்டுமே கிடைத்து வந்த இந்த விருதுகள், இந்த முறை தமிழகத்தில் எட்டு பேருக்கு கிடைக்கப் போவதாக கூறப்படுகிறது. திருச்சிக்கு அருகே உள்ள ஒரு விவசாயி, மண்பாண்டம் செய்பவர், திருநெல்வேலி, தஞ்சாவூரிலிருந்து ஒருவர் என, சராசரி மக்களுக்கு இந்தாண்டு விருதுகள் வழங்கப்பட உள்ளதாம்.

இந்த தமிழக பட்டியலில் பெண்களும் உண்டு.பிரதமரின், 'மன் கி பாத்' நிகழ்ச்சியில் குறிப்பிடப் பட்ட சிலருக்கும், இந்த விருது கிடைக்க உள்ளதாம். 'மோடிபிரதமரான பின், தமிழகத்திலிருந்து, 60 பேருக்கு இந்த பத்ம விருதுகள் வழங்கப்பட்டுள்ளன' என்கின்றனர், பா.ஜ., வினர்.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
hariharan - coimbatore,இந்தியா
11-ஜன-202112:11:21 IST Report Abuse
hariharan இப்பதான் சாமானிய மக்கள் மதிக்க படுகிறார்கள்.
Rate this:
Cancel
Vaiyapuri Rajendran - Chennai,இந்தியா
11-ஜன-202106:55:23 IST Report Abuse
Vaiyapuri Rajendran நடுவண் அரசால் பல்வேறு வகையான விருதுகள் வழங்கும் முறை மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது மகிழ்ச்சி....வருங்கால வைப்பு நிதியில் ஓய்வூதியம் பெறும் மூத்தவர்கள் ஒருவருக்கு விருது வழங்கினால் நல்லது...
Rate this:
Cancel
Vaiyapuri Rajendran - Chennai,இந்தியா
11-ஜன-202106:53:51 IST Report Abuse
Vaiyapuri Rajendran நடுவண் அரசின் நிதி நிலை அறிக்கையில் வருங்கால வைப்பு நிதியில் ஓய்வூதியம் பெறும் மூத்தவர்கள் மிகவும் சொற்ப தொகையை பெற்று வருகின்றனர் என்பதை அறிந்து அவர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விரும்புகிறேன்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X