பொது செய்தி

தமிழ்நாடு

பஞ்சவடியில் நாளை அனுமன் ஜெயந்தி விழா

Added : ஜன 10, 2021
Share
Advertisement
சென்னை : மத்திய திருப்பதி என்று அழைக்கப்படும், பஞ்சவடி ஆலயத்தில், அனுமன் ஜெயந்தி விழாவையொட்டி, நாளை அனுமனுக்கு, 2,500 லிட்டர் பால் அபிஷேகம் நடைபெற உள்ளது. இது தொடர்பாக, அந்த அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் எம்.கோதண்டராமன் வெளியிட்ட அறிவிப்பு: திண்டிவனம் -- புதுச்சேரி நெடுஞ்சாலையில், மத்திய திருப்பதி எனப்படும், பஞ்சவடி அனுமன் ஆலயம் அமைந்துள்ளது. இங்கு, எழுந்தருளி

சென்னை : மத்திய திருப்பதி என்று அழைக்கப்படும், பஞ்சவடி ஆலயத்தில், அனுமன் ஜெயந்தி விழாவையொட்டி, நாளை அனுமனுக்கு, 2,500 லிட்டர் பால் அபிஷேகம் நடைபெற உள்ளது.

இது தொடர்பாக, அந்த அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் எம்.கோதண்டராமன் வெளியிட்ட அறிவிப்பு: திண்டிவனம் -- புதுச்சேரி நெடுஞ்சாலையில், மத்திய திருப்பதி எனப்படும், பஞ்சவடி அனுமன் ஆலயம் அமைந்துள்ளது. இங்கு, எழுந்தருளி உள்ள, 36 அடி விஸ்வரூப ஜெயமங்கள பஞ்ச முக ஆஞ்சநேயருக்கு, அனுமன் ஜெயந்தி விழா நாளை நடக்க உள்ளது.இதற்கு முன்னோட்டமாக, ஜன., 8 முதல், காலை, மாலை இரு வேளைகளிலும் சாற்றுமுறையுடன் ஹோமம் நடந்து வருகிறது.

இன்றும், ஹோமம் மற்றும் லட்சார்ச்சனை நடைபெறுகிறது. நாளை காலை, 4:00 மணி முதல், அனுமன் ஜெயந்தி விழா நிகழ்வுகள் துவங்கும். காலை, 8:30 மணிக்கு, பஞ்ச முக ஆஞ்சநேய சுவாமிக்கு, 2,500 லிட்டர் பாலுடன், சந்தனம், கான்பூரில் இருந்து வரவழைக்கப்பட்ட சுத்தமான பன்னீருடன், ஷீராபிஷேகம் நடைபெறும்.மத்திய அரசு உத்தரவுப்படி, கொரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்றி, பக்தர்கள் தரிசனம் செய்யலாம்.இவ்வாறு, அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X