சென்னை : செங்குன்றத்தில் இருந்து பாரிமுனை நோக்கி சென்ற பஸ்சில், முதியவரிடம், 27 சவரன் நகை திருடிய பெண்களை, போலீசார் தேடி வருகின்றனர்.
ஆந்திர மாநிலம், சித்துார் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சேகர், 65. இவர், மகள் திருமணத்திற்கு, 27 சவரன் நகை சேமித்து வைத்திருந்தார்.இந்த நகைகளை, 'பாலிஷ்' போடுவதற்கு நேற்று சென்னை வந்த இவர், செங்குன்றத்தில் இருந்து பாரிமுனைக்கு செல்லும், தடம் எண்: 242 பஸ்சில் சென்றார்.இவரது அருகில் நின்ற இரண்டு பெண்கள், சேகரின் கவனத்தை திசை திருப்பி, ஓடும் பஸ்சில், 27 சவரன் நகையை திருடி நைசாக தப்பினர். இது குறித்து யானைக்கவுனி போலீசில் சேகர் புகார் அளித்துள்ளார். போலீசார் அந்த பெண்களை தேடி வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE