201 கிராமங்கள்காஞ்சிபுரம் மாவட்டத்தில், 201 கிராமங்களுக்கு, கிராம கண்காணிப்பு காவலர் நியமிக்கப்பட்டு உள்ளனர். சின்னச்சின்ன கிராமங்கள் ஒன்று சேர்த்து, போலீசார் கண்காணிப்பர். நியமிக்கப்பட்டுள்ள போலீசார், வாரத்தில் நான்கு நாட்கள், அவருக்கு ஒதுக்கப்பட்ட கிராமத்திற்கு, கட்டாயம் செல்வர் என, போலீசார் கூறினர்.மேலும், மணல் கடத்தல், அரிசி கடத்தல், அடிதடி, நில தகராறு உள்ளிட்ட சிறிய வகை குற்றங்களை, அவர்களே விசாரிப்பர் எனவும் கூறினர்.காஞ்சிபுரம், ஜன. 11-
கிராமப்புறங்களில் குற்ற நிகழ்வு மற்றும் சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்படுவதை தவிர்க்கவும், மக்கள், அமைதியான முறையில் வாழ்க்கையை நகர்த்தும் நோக்கிலும், 'கிராமப்புற காவலர் திட்டம்' அமலுக்கு வந்துள்ளது.இது சம்பந்தமாக, பொதுமக்கள் - போலீசார் இடையே, நல்லுறவை ஏற்படுத்தும் வகையில், டி.ஐ.ஜி., தலைமையிலான ஆலோசனை கூட்டம், காஞ்சிபுரத்தில், நேற்று முன்தினம் நடந்தது. போலீசார், பொதுமக்கள் பலர் பங்கேற்றனர்.இதில், கிராம காவல் கண்காணிப்பு அலுவலரின் பணிகள் குறித்தும் மற்றும் அவர்களின் உதவியை எவ்வாறு நாடுவது என்பது குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது.கூட்டத்தில், காஞ்சிபுரம் சரக டி.ஐ.ஜி., சாமுண்டீஸ்வரி பேசியதாவதுஅந்தந்த பகுதிகளில் ஏற்படும் பிரச்னைகளை, பொதுமக்கள், காவல் நிலையத்திற்கு சென்று, இனி புகார் அளிக்க வேண்டியதில்லை.நகர் பகுதிகளில், ஒவ்வொரு வார்டுக்கும், கிராமங்களில், சில கிராமங்களுக்கு ஒருவர் எனவும், கிராம கண்காணிப்பு காவலர் நியமிக்கப்பட்டு உள்ளார். அவரிடம், பொதுமக்கள் புகார் அளிக்கலாம்.மேலும், காவல் நிலைய ஆய்வாளர், சிறப்பு உதவி ஆய்வாளர், தனிப்பிரிவு போலீசார் ஆகியோரின் மொபைல் எண்கள், பொதுமக்கள் அறியும் வகையில், வார்டின் பல இடங்களில் வைக்கப்படும். அந்த எண்ணில் புகார் அளித்தால், போலீசாரே நேரில் வந்து விசாரித்து, உரிய நடவடிக்கை எடுப்பர்.குறிப்பாக, குற்றங்கள் நடக்கும் முன், உங்களுக்கு தெரிந்தால், தைரியமாக எங்களிடம் புகார் அளிக்கலாம். தகவல் அளிப்போரின் பெயர் ரகசியம் காக்கப்படும். போலீசார், எந்த மாதிரி நடவடிக்கை எடுத்தால் நன்றாக இருக்கும் என, ஆலோசனையும் வழங்கலாம்.இவ்வாறு, அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE