காஞ்சிபுரம் : ஒரு நாளைக்கு, 800 பேருக்கு கொரோனா தடுப்பூசி போட உள்ளதாக, கலெக்டர் மகேஸ்வரி தெரிவித்துள்ளார்.நாடு முழுதும் கொரோனா தடுப்பூசி, வரும், 16ம் தேதி முதல் போடப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழகத்தில், கொரோனா தடுப்பூசி போடுவதற்கான ஒத்திகை, கடந்த நாட்களில் நடைபெற்றது. இந்நிலையில், கலெக்டர் மகேஸ்வரி கூறியதாவது:காஞ்சிபுரம் மாவட்டத்தில், தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டிய நபர்கள் குறித்து, கணக்கெடுப்பு விரைந்து நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக, 'ஹெல்த்கேர் ஒர்கர்ஸ்' எனப்படும், மருத்துவ பணியாளர்கள், இதையடுத்து முன்கள பணியாளர்கள், முதியோர், இணை நோய் உள்ளவர்கள் என, வகைப்படுத்தப்பட்டு உள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் தடுப்பூசி போடுவதற்கு, எட்டு மையங்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளன. இந்த எண்ணிக்கை கூடுதலாகவும் வாய்ப்பு உள்ளது.அதேபோல், மருத்துவ பணியாளர்கள், 7,000 பேரின் விபரங்கள் தயாராக உள்ளது. ஒரு மையத்தில், ஒரு நாளைக்கு, 100 பேருக்கு தடுப்பூசி போட திட்டமிடப்பட்டு உள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE