பொது செய்தி

தமிழ்நாடு

பொங்கல் பண்டிகை முன்னிட்டு

Added : ஜன 10, 2021
Share
Advertisement
காஞ்சிபுரம் : பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, காஞ்சிபுரம் காந்தி சாலையில், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, வெளி மாவட்டங்களில் இருந்து ஏராளமான வியாபாரிகள், காஞ்சிபுரம் வருவர்.அதன்படி, காந்தி சாலையில், பிரபல ஜவுளிக்கடைகள், தள்ளுவண்டி கடைகள், சாலையோர கடைகளில், பொங்கல் பண்டிகை விற்பனை களைகட்டியுள்ளது. பொதுமக்கள், புத்தாடை வாங்க அதிகம்

காஞ்சிபுரம் : பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, காஞ்சிபுரம் காந்தி சாலையில், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, வெளி மாவட்டங்களில் இருந்து ஏராளமான வியாபாரிகள், காஞ்சிபுரம் வருவர்.அதன்படி, காந்தி சாலையில், பிரபல ஜவுளிக்கடைகள், தள்ளுவண்டி கடைகள், சாலையோர கடைகளில், பொங்கல் பண்டிகை விற்பனை களைகட்டியுள்ளது. பொதுமக்கள், புத்தாடை வாங்க அதிகம் குவிவதால், காந்தி சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.இங்கு, நேற்று மதியம் ஆய்வு செய்த மாவட்ட எஸ்.பி., சண்முகப்ரியா, கூட்டத்தை கட்டுப்படுத்தவும், திருடர்களை கண்காணிக்கவும், கூடுதல் போலீசாரை நியமித்துள்ளார்.

முதல்வர் இ.பி.எஸ்., காஞ்சிபுரம் தேரடி தெருவில், நேற்று தேர்தல் பிரசாரத்திற்கு வருவதாக தகவல் வெளியானது. அவரது வருகையால், காந்தி சாலையில் போக்குவரத்து தடை செய்யப்பட்டு, வியாபாரம் பாதிக்கும் என, வியாபாரிகள் கவலையில் இருந்தனர்.இந்நிலையில், பொங்கல் கழித்து, முதல்வர் பிரசாரம் செய்ய உள்ளதாக தகவல் வெளியானதால், அவர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X