மேற்கு வங்கத்தில், போலீஸ், பேரிடர் மேலாண்மை பணியாளர்கள் உள்ளிட்ட, கொரோனாவுக்கு எதிரான போரில் ஈடுபட்டுள்ளோருக்கு, முதலில் தடுப்பூசி வழங்கப்படும். பின், மாநிலத்தில் உள்ள அனைவருக்கும் தடுப்பூசியை இலவசமாக வழங்க, அரசு ஏற்பாடு செய்து வருகிறது என்பதை, மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்
.மம்தா பானர்ஜிமேற்கு வங்க முதல்வர், திரிணமுல் காங்கிரஸ்
சந்தர்ப்பவாதி நிதிஷ்!
எல்லையில் சீன ஆக்கிரமிப்பை நினைத்து, நாடே கவலையில் உள்ளது. ஆனால், பீஹார் மாநிலமோ, நிதிஷ் குமார் போன்ற சந்தர்ப்பவாதி முதல்வரானதை நினைத்து கவலைப்படுகிறது. 40 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றவர், மாநில முதல்வராக பதவி வகிக்கிறார். கேட்டால், அழுத்தத்தின் காரணமாக, அப்பதவியை ஏற்றதாக கூறுகிறார்.மனோஜ் ஜாஎம்.பி., -- ராஷ்ட்ரீய ஜனதா தளம்
பதில் தேவை!
பாகிஸ்தானின் பாலகோட் பகுதியில், நம் விமானப்படை நடத்திய தாக்குதலில், 300 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதை பாகிஸ்தான் ஒப்புக் கொண்டுள்ளது. ஆனால், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், நம் வீரர்களின் தீர செயலை அங்கீகரிக்க மறுத்தன. இப்போது இந்த தேசத்திற்கு அவர்கள் பதில் அளிக்க வேண்டும்.
ஹர்நாத் சிங் யாதவ், ராஜ்யசபா எம்.பி., - பா.ஜ.,
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE