இஸ்லாமாபாத்: தொழில்நுட்ப கோளாறு காரணமாக, நேற்று முன்தினம் இரவு மி ன்தடை ஏற்பட்டதால், நம் அண்டை நாடான பாகிஸ்தானின் பெரும்பாலான நகரங்கள், இருளில் மூழ்கின.
பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் உள்ள குட்டு மின் உற்பத்தி நிலையத்தில், நேற்று திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. அதனால், கராச்சி, ராவல்பிண்டி, லாகூர், இஸ்லாமாபாத், முல்தான் உட்பட பல நகரங்களில், நேற்று முன்தினம் நள்ளிரவில் மின் தடை ஏற்பட்டது. நாட்டின் பெரும்பாலான பகுதிகள் இருளில் மூழ்கின.அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் கடுமையான முயற்சி காரணமாக, பல மணி நேர போராட்டத்துக்கு பின், பெரும்பாலான பகுதிகளில் மின் வினியோகம் சீரானது.
''இந்தக் கோளாறு எப்படி ஏற்பட்டது என்பது குறித்து விசாரித்து வருகிறோம். பெரும்பாலான பகுதிகளில் நிலைமை சீரடைந்துள்ளது,'' என, பாகிஸ்தான் மின்சார துறை அமைச்சர் ஒமர் அயப் கான் கூறியுள்ளார்.இதற்கு முன், 2013 - 2018ல், நவாஸ் ஷெரீப் பிரதமராக இருந்தபோது, எட்டு முறை, நாடு முழுதும் மின் தடை ஏற்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE