விபத்தில் முதியவர் பலிமப்பேடு: கூவம் அடுத்த, கொருக்கம்பேடு கிராமத்தைச் சேர்ந்தவர் குமரேசன், 68. இவர், கடந்த 6ம் தேதி, பேரம்பாக்கத்திற்கு, சென்று விட்டு திரும்பி வந்து கொண்டிருந்தார். அப்போது, கூவம் ஆற்றுப் பாலம் அருகே வந்த போது, சாலையில், இரு எருமை மாடுகள் சண்டையிட்டு வந்தன.இதையடுத்து, டூ - வீலரை நிறுத்தி, நின்று கொண்டிருந்த போது, மாடுகள் முட்டியதில் படுகாயமடைந்த அவரை அருகிலிருந்தோர், போரூர் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
பின், சென்னை அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சை பெற்று வந்த குமரேசன், நேற்று முன்தினம் இறந்தார்.இதுகுறித்து, இவரது மகள் தணிகைநாயகி அளித்த புகாரையடுத்து, மப்பேடு போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.டூ - வீலர்கள் மாயம்வெள்ளவேடு: திருமழிசையைச் சேர்ந்தவர் சதீஷ், 35. இவர், நேற்று முன்தினம் காலை, அப்பகுதியில் உள்ள தேவாலயத்தில், ஹீரோ ஸ்பிளன்டர் டூ - வீலரை நிறுத்திவிட்டு, உள்ளே சென்று ஜெபம் செய்தார். பின், வெளியே வந்து பார்த்தபோது, டூ - வீலர் மாயமானது தெரிய வந்தது. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இதேபோல், திருமழிசை, பட்டேல் தெருவைச் சேர்ந்தவர் ராஜன், 44. இவர், நேற்று முன்தினம், ராயல் என்பீல்ட் புல்லட் டூ - வீலரை வீட்டின் வெளியே நிறுத்தி விட்டு சென்றார். பின், திரும்பி வந்து பார்த்தபோது, டூ - வீலர் மாயமானது தெரிந்தது.இதுகுறித்து, சதீஷ் மற்றும் ராஜன் ஆகிய இருவரும், தனித்தனியாக கொடுத்த புகாரின்படி, வெள்ளவேடு போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.குழந்தைகள் படுகாயம்கடம்பத்துார்: சிற்றம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் விநாயகம், 31. இவரது, இரு குழந்தைகள், வைஸ்ணவி, 7, சஜித், 2, அப்பகுதியில் உள்ள அங்கன்வாடிக்கு சென்று விட்டு, பின் வீடு திரும்பி வந்து கொண்டிருந்தனர்.அப்போது அருகில் உள்ள விநாயகர் கோவில் அருகே வந்த போது கோவிலின் சிமென்ட் கூரை பெயர்ந்து விழுந்தது. இதில், படுகாயமடைந்த குழந்தைகள் இருவரும், தனியார் மருத்துவமனையில் முதலுதவிக்கு பின், சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.இதுகுறித்து, வி.ஏ.ஓ., பரணிதரன் அளித்த புகாரையடுத்து, கடம்பத்துார் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.20 சவரன் நகை பறிப்புகாஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அடுத்த, சிறுகாவேரிபாக்கத்தைச் சேர்ந்தவர் பாபு மனைவி ஜெயலட்சுமி, 36. காஞ்சிபுரத்தில் பைனான்ஸ் தொழில் செய்கிறார்.நேற்று முன்தினம் இரவு, கடைகளுக்கு சென்று, தேவையான பொருட்களை வாங்கி, தன் இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு சென்றார்.இவரை பின் தொடர்ந்து, தலைகவசம் அணியாமல், இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் இருவர், சிறுகாவேரிபாக்கம் பகுதியில், ஜெயலட்சுமி கழுத்தில் இருந்த, 20 சவரன் நகையை பறித்துச் சென்றனர். பாலுசெட்டிசத்திரம் போலீசார் விசாரிக்கின்றனர்.உண்டியலை உடைத்தோர் சிக்கினர்காஞ்சிபுரம்: காஞ்சிபுரம், ஆலடிபிள்ளையார் கோவில் தெருவில், அறநிலைய துறை பராமரிப்பில் பணாமுடீஸ்வரர் கோவில் உள்ளது. இம்மாதம், 5ம் தேதி, இந்த கோவில் உண்டியல் உடைக்கப்பட்டது. இந்நிலையில், சின்ன காஞ்சிபுரம் பகுதியில் திரிந்த ஐந்து பேரை, விஷ்ணுகாஞ்சி போலீசார், நேற்று முன்தினம் பிடித்தனர். விசாரித்ததில், அவர்கள் பழைய குற்றவாளிகள் என்பது தெரிந்தது.இதையடுத்து, இதில் இருவர், சென்னை கொரட்டூர் காவல் நிலைய போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். மற்ற மூவர், பூபாலன், 20, பால்ஸ்டீபன், 41, ஜெயராஜ், 21, என்பதும், மேற்கண்ட கோவில் உண்டியலை உடைத்ததும் தெரிந்தது. இவர்களை, போலீசார் கைது செய்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE