சென்னை : தாம்பரத்தில் மின்சார ரயிலில் மது போதையில் துாங்கிய பெண்ணை பலாத்காரம் செய்த 2 துாய்மை பணியாளர்கள் கைது செய்யப்பட்டனர்.
செங்கல்பட்டு அடுத்த பரனுரை சேர்ந்த 40 வயது பெண், ஜன., 8 இரவு பல்லாவரத்தில் இருந்து பரனுார் செல்ல செங்கல்பட்டு செல்லும் மின்சார ரயிலில் ஏறினார். மதுபோதையில் இருந்ததால் அப்பெண் துாங்கிவிட்டார். அந்த ரயில் செங்கல்பட்டு சென்று அங்கிருந்து மீண்டும் கடற்கரை ரெயில் நிலையத்திற்கு சென்று, மீண்டும் தாம்பரம் வந்தது. அதன்பின் தாம்பரம் ரெயில்வே பணிமனைக்கு சென்றது.நள்ளிரவில் அப்பெண் விழித்து பார்த்தபோது பணிமனையில் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
அப்போது அங்கு வந்த துாய்மை பணியாளர்கள் சுரேஷ் 30, அப்துல் அஜிஸ் 30, அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தனர். இங்கு நடந்ததை வெளியே கூறக்கூடாது என அப்பெண்ணை மிரட்டி அனுப்பினர்.இதையடுத்து அப்பெண் தாம்பரம் ரயில்வே போலீசாரிடம் கொடுத்த புகாரின் பெயரில் சுரேஷ், அப்துல் அஜிஸ் கைது செய்யப்பட்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE