பொது செய்தி

தமிழ்நாடு

வா தலைவா! ரஜினி ரசிகர்கள் திடீர் ஆவேசம்: சென்னை போராட்டத்தால் பரபரப்பு

Updated : ஜன 11, 2021 | Added : ஜன 10, 2021 | கருத்துகள் (40+ 105)
Share
Advertisement
சென்னை:'அரசியலுக்கு வரப்போவதில்லை' என, நடிகர் ரஜினி அறிவித்துள்ள நிலையில், 'அவர் தன் முடிவை மாற்றிக் கொண்டு, அரசியலுக்கு வர வேண்டும்' என, சென்னையில் குவிந்த அவரது ரசிகர்கள், ஆவேசமாக வேண்டுகோள் விடுத்து, அறப் போராட்டம் நடத்தியதால், பரபரப்பு ஏற்பட்டது. அத்துடன், 'வா தலைவா வா' என, அழைப்பு விடுத்து, கன்னியாகுமரி முதல் சென்னை வரை, 'ஜோதி'யுடன் தொடர் ஓட்டம் நடத்தப்
வா தலைவா, ரஜினி ரசிகர்கள், திடீர் ஆவேசம், சென்னை போராட்டம், பரபரப்பு

சென்னை:'அரசியலுக்கு வரப்போவதில்லை' என, நடிகர் ரஜினி அறிவித்துள்ள நிலையில், 'அவர் தன் முடிவை மாற்றிக் கொண்டு, அரசியலுக்கு வர வேண்டும்' என, சென்னையில் குவிந்த அவரது ரசிகர்கள், ஆவேசமாக வேண்டுகோள் விடுத்து, அறப் போராட்டம் நடத்தியதால், பரபரப்பு ஏற்பட்டது. அத்துடன், 'வா தலைவா வா' என, அழைப்பு விடுத்து, கன்னியாகுமரி முதல் சென்னை வரை, 'ஜோதி'யுடன் தொடர் ஓட்டம் நடத்தப் போவதாகவும் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் ஆளுமை மிக்க தலைவர்களாக விளங்கிய, கருணாநிதியும், ஜெயலலிதாவும் தற்போது உயிருடன் இல்லை. இந்தச் சூழலில், 'சரியான தலைவர் இல்லை; சிஸ்டம் சரியில்லை' என்று பேசிய நடிகர் ரஜினி, '2021ல் நடக்கும் சட்டசபை தேர்தலில் கட்சி துவக்கி, 234 தொகுதிகளிலும் போட்டியிடுவேன்' என, 2017 இறுதியில் அறிவித்தார்.இதையடுத்து, தன் ரசிகர் மன்றத்தை, ரஜினி மக்கள் மன்றமாக மாற்றினார்; நிர்வாகிகளை நியமித்து, தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளை மேற்கொண்டார். 'பூத் கமிட்டி' அளவிலும் நிர்வாகிகள் நியமிக்கப்பட்டனர்.

'பதவி மற்றும் பணத்திற்காக கட்சியில் யாரும் சேர வேண்டாம்' என்று எச்சரித்த ரஜினி, மீறி செயல்பட்டவர்களை மன்றத்தில் இருந்து நீக்கினார். தன் அரசியல் நிலைப்பாடு குறித்து, அவ்வப்போது பேசி வந்த ரஜினி, தனக்கு நெருக்கமானவர்கள் மற்றும் அரசியல் தலைவர்களையும் சந்தித்து, அரசியல் திட்டங்கள் குறித்து ஆலோசித்து வந்தார்.

இறுதியில், அர்ஜுன மூர்த்தியை ஒருங்கிணைப்பாளராகவும், தமிழருவி மணியனை மேற்பார்வையாளராகவும் நியமித்தார். 2020 டிச., 31ல், கட்சி பெயர் குறித்து அறிவிப்பேன் என்றும் தெரிவித்தார்.


திடீர் மாற்றம்

இந்நிலையில், 2020 டிச., 14ல், ஐதராபாதில் நடந்த, அண்ணாத்த படப்பிடிப்பில் இருந்த போது, படக் குழுவினருக்கு கொரோனா தொற்று பரவியதால், ரஜினி தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார். அவருக்கு, கொரோனா இல்லை என்பது உறுதியானது. அதேநேரம், ரத்த அழுத்த மாறுபாட்டால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.

'குறைந்த நேரத்தில், முழு வேகத்தில் அரசியலில் ஈடுபட முடியாது. என் சுயநலத்திற்காகவும், கொடுத்த வாக்கை காப்பாற்றவும், கவுரவத்திற்காகவும், நம்பி வந்தவர்களை பலிகடாவாக்க விரும்பவில்லை' எனக்கூறி, அரசியலில் நுழையும் முடிவுக்கு, ரஜினி முற்றுப்புள்ளி வைத்தார்.


ரசிகர்கள் அதிருப்திரஜினியின் பேச்சை, வேத வாக்காக எடுத்து, மூன்று ஆண்டுகளாக நலத்திட்ட உதவிகளை வழங்க வந்த அவரது ரசிகர்கள், திடீர் முடிவால் அதிருப்தி அடைந்துள்ளனர். 'ரஜினி அரசியலுக்கு வர வேண்டும்' என, அவரின் வீட்டின் முன் குவிந்து வலியுறுத்தி வந்தனர்.


போராட்டம்

இந்நிலையில், சென்னை வள்ளுவர் கோட்டம் முன், நேற்று பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் உட்பட, 1,000த்துக்கும் மேற்பட்ட ரஜினி ரசிகர்கள் குவிந்தனர். ரஜினி தன் முடிவை மாற்றிக் கொண்டு, மீண்டும் அரசியலுக்கு வர வேண்டும் என வலியுறுத்தி, கவன ஈர்ப்பு அறப் போராட்டம் நடத்தினர்.

போராட்டத்தில், ரஜினி ரசிகர்கள் பேசியதாவது: ரஜினி எதையும் நேரம் பார்த்து தான் செய்வார். இப்போதைக்கு அரசியலில் நுழையும் சூழல் இல்லை என்று தான் கூறியுள்ளார். அவர் நிச்சயம் அரசியலுக்கு வர வேண்டும்; அதற்கான சூழலை நாம் உருவாக்க வேண்டும்.இது, கட்சி தலைமை கூட்டிய கூட்டமில்லை; தொண்டர்கள் கூட்டிய கூட்டம். தமிழக அரசியல் வரலாற்றில், இது போன்ற சாதனையை எந்த கட்சியும் செய்யவில்லை. இதையே தலைமை கூட்டியிருந்தால், சென்னையே அதிர்ந்திருக்கும். ரஜினியின் உடல் நலனில், எங்களுக்கும் அக்கறை உண்டு. அவர் நிச்சயம் இன்னும் பல ஆண்டுகள் நலமுடன் இருப்பார்.

அதேபோல, தமிழகமும் நலமுடன் இருக்க வேண்டும்; அதற்கு, ரஜினி அரசியலுக்கு வர வேண்டும்.என் தாத்தா, அப்பா, நான் செய்த தவறை, இனியும் செய்ய வேண்டாம். என் பிள்ளைகளுக்கு, நல்ல அரசியல் தலைவர் வேண்டும். அடுத்த கட்டமாக, 'வா தலைவா வா' என்ற கோரிக்கையுடன், கன்னியாகுமரியில் இருந்து, 'ஜோதி' ஓட்டத்தை ஆரம்பிக்க உள்ளோம். இதன் வாயிலாக, தமிழகம் முழுதும் பயணித்து, மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவோம்; ரஜினி அரசியலுக்கு வர வேண்டும் என்பதை, மக்கள் இயக்கமாக மாற்றுவோம். இவ்வாறு அவர்கள் பேசினர்.


புதிய எழுச்சி

போராட்டம் குறித்து, ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் கூறியதாவது:தலைவரின் முடிவை மீறி செயல்படக் கூடாது. நேரம் வரும் வரை பொறுத்திருக்கலாம். ஆர்வம் மிகுதியில், சிலர் போராட்டத்தை நடத்தி உள்ளனர். இதையே தலைமை சார்பில் நடத்தியிருந்தால், தமிழகத்தில் ஒரு புதிய எழுச்சி உருவாகி இருக்கும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.


உடல் உறுப்பு தானம்ரசிகர்கள் ஆர்வம்

* ரசிகர்களின் போராட்டத்திற்கு, தி.நகரைச் சேர்ந்த ராமதாஸ், போலீஸ் அனுமதி பெற்றிருந்தார். காலை, 11:00 முதல், 12:00 மணி வரை மட்டுமே அனுமதி வழங்கப்பட்டிருந்தது

* தலைமை எச்சரித்தும், 1,000த்திற்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் பங்கேற்றனர். காலை, 6:00 மணி முதலே, வேலுார், விழுப்புரம், கன்னியாகுமரி, ஆரணி, கடலுார் என, பல ஊர்களில் இருந்தும், ரசிகர்கள் வந்திருந்தனர்

* கூட்டத்திற்கு வந்தவர்கள், கண் மற்றும் உடல் உறுப்பு தானம் செய்வதாக, பதிவேட்டிலும் கையெழுத்திட்டனர்.


ரஜினி வாய்ஸ் யாருக்கு?

தேர்தலுக்கு சில மாதங்களே உள்ள நிலையில், திராவிட கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன. நடிகர் கமலும், தமிழகம் முழுதும் பிரசாரம் செய்து வருகிறார்.அரசியல் கட்சி துவங்கும் முடிவை கைவிட்ட நடிகர் ரஜினி, 1996 தேர்தல் போல, இந்த தேர்தலிலும், 'வாய்ஸ்' கொடுப்பாரா என்ற, எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ரஜினிக்கு அழைப்பு விடுத்து , சென்னை வள்ளுவர் கோட்டத்தில், ரசிகர்கள் நடத்திய போராட்டம், மற்ற கட்சிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.

ரஜினி ரசிகர்களின் ஓட்டுகளை, தங்கள் பக்கம் திருப்ப, மற்ற கட்சியினர் கவனம் செலுத்தி வருகின்றனர். இதற்கு, ரஜினி வாய்ஸ் கொடுத்தால் மட்டுமே சாத்தியம்.'ரஜினி அரசியலுக்கு வராவிட்டால், எங்கள் ஓட்டு நோட்டாவுக்கே' என, அவரது ரசிகர்கள் அறிவித்துள்ளனர். எனவே, அரசியல் கட்சி துவங்காவிட்டாலும், இந்த தேர்தலில், ரஜினி முக்கிய பங்கு வகிப்பார் என, அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

Advertisement
வாசகர் கருத்து (40+ 105)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Jawa - Erode,கேப் வெர்டி
11-ஜன-202122:05:06 IST Report Abuse
Jawa இந்த வயதில் ரஜினிக்கு எழுச்சி கொஞ்சம் கஷ்டம் தான்.
Rate this:
Cancel
Krishnamurthy Venkatesan - Chennai,இந்தியா
11-ஜன-202120:53:05 IST Report Abuse
Krishnamurthy Venkatesan வேலை வெட்டி இல்லாத கூட்டம். அவரே முடியாதுன்னு சொல்லிட்டார். இவர்கள் என் தேவை இல்லாமல் கூப்பாடு போடுகின்றனர். போலீஸ் அனுமதி கொடுத்தது தவறு.
Rate this:
Cancel
11-ஜன-202119:47:55 IST Report Abuse
தியாகராஜன் வெ பாவம் ரஜினியை விட்டு விடுங்கள். படத்தில் தான் வீரம், ஆவேச வசனங்கள் எல்லாம். நிஜத்தில், நடைமுறை வாழ்க்கையில் பின்வாங்கல் தான். கண்களை கட்டி காட்டில் விட்டது போல் இருந்தாலும் கமல்ஹாசன் அவர்கள் ஏதோவொரு நம்பிக்கையில் வலம் வருகிறார். பயம் என்பது "super star" க்கு வரக்கூடாதா, அவரும் மனிதர் தானே ஆனால் ஒன்று ரஜினி அவர்கள் இனிமேலும் சினிமாவில் நடிப்பதை விட்டு விட வேண்டும். தப்பி தவறி நடித்தாலும் சம்பந்தம் சம்பந்தமே இல்லாமல் யாரோ எழுதிக் கொடுக்கும் "punch dialogues" பேசக்கூடாது. கன்னா பின்னா என்று யாருக்கும் "voice" கொடுக்கிறேன் பேர்வழி என்று உளறக் கூடாது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X